சனி, 14 பிப்ரவரி, 2026

டிப்ளமோ, ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு ஓமனில் வேலை

 

oman jobs rec

உணவு, இருப்பிடம் மற்றும் விமான பயணச்சீட்டு ஆகியவை வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.

ஓமன் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய டிப்ளமோ அல்லது ஐ.டி.ஐ முடித்த தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தமிழக அரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ. 41,000 முதல் ரூ. 51,000 வரை ஊதியம் வழங்கப்படுவதோடு, உணவு, இருப்பிடம் மற்றும் விமான பயணச்சீட்டு ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

இது தொடர்பாக தமிழக அரசின் வெளிநாட்டு மற்றும் மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “ஓமன் நாட்டில் பணிபுரிய Production (Exposure in Melting/ Moulding/ Process Control) மற்றும் Finishing & Inspection (Exposure in Quality/ Final Inspection) பிரிவுகளில் 5 ஆண்டுகள் அனுபவத்துடன் விண்ணப்பிக்கலாம்.

ஓமன் நாட்டில் பணிபுரிய டிப்ளமோ (background) அல்லது ஐ.டி.ஐ (background) தேர்ச்சி பெற்று இரண்டு வருட பணி அனுபவத்துடன் கூடிய 22 முதல் 35 வயதிற்கு உட்பட்ட Production (Exposure in Melting/ Moulding/ Process Control) மற்றும் Finishing & Inspection (Exposure in Quality/ Final Inspection) பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இப்பணிக்கு மாத வருமானம் தோராயமாக ரூ. 41,000/- முதல் ரூ. 51,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

மேலும் உணவு, இருப்பிடம் மற்றும் விமான பயணச்சீட்டு ஆகியவை வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைப்பதற்கான நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ. 35,400/- மட்டும் செலுத்தினால் போதுமானது.

மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆர்வமுள்ளவர்கள் ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுயவிவரம் அடங்கிய விண்ணப்பம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ், பாஸ்போர்ட் நகல் மற்றும் புகைப்படம் (Resume, Qualification, Experience Certificate, Passport Copy & Photo) ஆகியவற்றை 28.2.2026 குள் அனுப்பவும்.

கூடுதல் விவரங்களுக்கு ஓமன்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையதளம் www.omemanpower.tn.gov.in மற்றும் தொலைபேசி எண்கள் (044-22502267) & வாட்ஸ்அப் எண் (9566239685) வாயிலாக அறிந்துகொள்ளலாம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/education-jobs/oman-jobs-recruitment-production-finishing-inspection-last-date-february-28-11105008