/indian-express-tamil/media/media_files/2026/02/20/tamilnadu-anbil-m-2026-02-20-10-30-52.jpg)
திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கிழக்குத் தொகுதியில் உள்ள இ.பி.ரோட்டில், தமிழ்நாடு தலைகுனியாது பரப்பரை பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பிள்ளைகள் படிக்கும் படிப்பில் அரசியல் நடத்துபவர்கள் தான் ஒன்றிய அரசு, அதனுடன் துணை போவதுதான் அதிமுக. அடுத்த தேர்தலை மனதில் வைத்து ஆட்சி நடத்துவதை காட்டிலும், அடுத்த தலைமுறையை மனதில் வைத்து ஆட்சி நடத்தக்கூடியவர் தான் நமது தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
மேலும், இன்னுயிர் காப்போம், நம்மை காப்போம் 48 எனும் திட்டத்தின் மூலம் மனிதநேயத்தை எடுத்துரைத்தவர் தான் நமது தமிழக முதல்வர்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/02/20/trichy-2-2026-02-20-10-30-52.jpeg)
ஒருவர் விபத்தின் மூலம் மூளை சாவு ஏற்பட்டால் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்தால் அவருக்கு அரசு மரியாதை என்பதை முதன் முதலில் வழங்கியவர் நமது தமிழக முதல்வர் தான். எனது மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருப்பது தமிழக முதல்வர் கொண்டு வந்த முத்தான திட்டம் அண்ணல் அம்பேத்காரின் பேரில் உருவான உயர்வுக்கு படி என்னும் திட்டம் தான்.
இந்தத் திட்டத்தை கடந்த அதிமுக அரசில் படித்த மாணவர்கள் எத்தனை பேர் என்றால் இரண்டு பேர் மட்டும் தான். நமது தமிழக முதல்வர் ஆட்சியில் கடந்த நான்கே முக்கால் ஆண்டு காலத்தில் ஒரு மாணவருக்கு ரூ.35 லட்சம் செலவு செய்து வெளிநாட்டில் அவர்களை படிக்க வைத்து இதுவரை 386 மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதற்கு காரணம் நமது தமிழக முதல்வர் தான். இதற்காக தமிழக அரசு 180 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இதை செலவு என்று தமிழக முதல்வர் பார்க்காமல் முதலீடு என்று பார்த்து வருவதாகவும் எடுத்துரைத்தார்.
மாணவர்களுக்கு கல்வியானது எளிதாக கிடைத்துவிடவில்லை, கடந்த 200 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு தான் நமது பிள்ளைகள் பள்ளிகளுக்கு சென்று கல்வி கற்று வருகின்றனர். இதற்கு காரணம் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், கலைஞர், தற்போது உள்ள தமிழக முதல்வர் ஆகியோர்தான் காரணம். தந்தை செய்த தொழிலை மகன் செய்ய வேண்டும் என்ற நிலையை மாற்றிய அரசு திராவிட மாடல் அரசு தான். 1938 ஆம் ஆண்டு என்ன புரட்சி ஏற்பட்டதோ, அந்த புரட்சி தான் தற்போது வரை தமிழகத்தில் நிலவி வருகின்றது.
மேலும் மத நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் ஆட்சியாக இந்த அரசு திகழ்ந்து வருகின்றது. ஜல்ஜீவன் திட்டத்தை சிறப்பாக நடத்தி வருவது தமிழகம் தான் என பெருமையோடு கூறுவது ஒன்றிய அரசு தான். ஆனால், அதற்குரிய ரூ.312 கோடி நிதியை தான் ஒன்றிய அரசு வழங்க மறுக்கின்றது. கடந்த இரண்டு வருடமாக கல்விக்கான நிதி ரூ.3548 கோடியை நிறுத்தி வைத்திருப்பதும், இதே ஒன்றிய அரசுதான். ஆனால் அதே ஒன்றிய அரசுடன் கூட்டணி வைத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தமிழக அரசை வசைப்பாடி அரசியல் நடத்தி வருகின்றார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/02/20/trichy-2026-02-20-10-30-52.jpeg)
மேலும், ஒன்றிய அரசு நமக்கு வழங்க வேண்டிய அனைத்து நிதிகளையும் வழங்கினாலே நமது தமிழகம் முன்னேற்ற பாதையில் தான் செல்லும். அனைத்து நலத்திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்த முடியும். ஜூன் மாதம் மகளிருக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். ஆனால், ஒன்றிய அரசு முழு நிதியையும் வழங்கினால் தற்போது அந்தத் தொகையை நாம் வழங்க முடியும். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் எங்கெல்லாமோ பாஜக அரசு ஆட்சியில் அமர முயற்சி செய்து கொண்டிருக்கிறது. எங்கு பாஜக ஆட்சி அமைந்தாலும், தமிழக மக்கள் ஒரு பொழுதும் இங்கு இடம் அளிக்க மாட்டோம் என உணர்த்துவார்கள். ஏனென்றால், இந்த மண் தந்தை பெரியாரால் பண்படுத்தப்பட்ட மண், பேரறிஞர் அண்ணாவால், கலைஞரால், தமிழக முதல்வரால் உருவாக்கப்பட்ட மண்ணாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது என பேசினார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்தக் கூட்டத்தில் திமுக செய்தி தொடர்பு துணைத் தலைவர் மருது.அழகுராஜ், மலைக்கோட்டை பகுதி செயலாளர் மோகன், தொகுதி பார்வையாளர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர் வன்னை அரங்கநாதன், மாநில அணி நிர்வாகி செந்தில், துணை மேயர் திவ்யா, மாவட்ட, மாநகர, பகுதி, வட்டகழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக, திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் வரவேற்புரையாற்றினார். கோட்டத் தலைவரும், மாநகர மாநகர திமுக செயலாளருமான மு.மதிவாணன் நன்றி உரையாற்றினார்.
க.சண்முகவடிவேல்
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-minister-anbil-mahes-said-about-central-government-school-education-11135595





