/indian-express-tamil/media/media_files/2026/02/19/punjab-police-encounter-2026-02-19-10-30-06.jpg)
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த போலீஸ் நடவடிக்கைகள் குறித்து அம்மாநில டிஜிபி கவுரவ் யாதவ் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு முதல் அறிக்கையை வெளியிட்டார். அதன்படி, ஏப்ரல் 2022 முதல் 324 கேங்ஸ்டர்கள் மீது என்கவுண்டர்கள் நடந்துள்ளதாகவும், அதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 515 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், கைது செய்யப்பட்ட 515 கேங்ஸ்டர்களில் 319 பேருக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
அரசு அனுமதித்த நீதிக்கு புறம்பான கொலைகள் என்ற குற்றச்சாட்டுகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையைக் சமர்பிக்க கோரி தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) பஞ்சாப் உள்துறை செயலாளருக்கு அனுப்பிய நோட்டீஸைத் தொடர்ந்து அம்மாநில டிஜிபி கவுரவ் யாதவ் அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் இரண்டு மாதங்கள் ஆகியும், இது குறித்து அரசு பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இதனிடையே அந்த அறிக்கை வெளியானதில் இருந்து பஞ்சாபில் என்கவுண்டர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் விசாரணையில், கடந்த ஆண்டு நவம்பர் 2025 முதல் ஜனவரி 2026 வரையிலான 3 மாதங்களில், காவல்துறை பதிவுகளின்படி , பஞ்சாப் காவல்துறை 34 என்கவுண்டர்களைப் பதிவு செய்துள்ளது. இதில் ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் ஒன்று அல்லது அதற்கு அதிகமான என்கவுண்டர்கள் பதிவாகியுள்ளது. இதன் விளைவாக 5 பேர் இறந்தனர் மற்றும் 45 பேர் காயமடைந்தனர். இதில் கடந்த மாதம் மட்டும் 15 என்கவுண்டர்கள் நடந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
நேற்று முன்தினம் (பிப்ரவரி 17) அனுப்பப்பட்ட எழுத்துப்பூர்வ கேள்வித்தாள் உட்பட, பலமுறை முயற்சித்த போதிலும், மாநில அரசு, உள்துறை மற்றும் பஞ்சாப் காவல்துறை அதிகாரிகள் இது குறித்த எந்த கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. அதே சமயம் தற்போதைய சூழ்நிலைகள் பல ஒற்றுமைகளைக் காட்டுகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் காவல்துறையினரின் மிகவும் பொதுவாக சொல்லும் காரணம் தற்காப்பு. என்கவுண்டர்களில் மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமானவை குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவலில் இருந்தபோது நடந்துள்ளது. அதேபோல் பல என்கவுண்டர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைவிலங்கு போடப்பட்ட நிலையில், மீட்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தை வைத்து தாக்கியதால், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதில் குறைந்தது 8 சம்பவங்களில், காவல்துறையினர் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஆனால், "குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள்" அணிந்திருந்ததால் போலீசார் காப்பாற்றப்பட்டதாக பதிவுகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற சம்பவங்களில், நேரங்களில், துப்பாக்கி குண்டுகள் காவல் வாகனங்களைத் தாக்கியுள்ளன. அதேபோல் பாதி என்கவுண்டாகளில், காவல்துறையினர் ரகசிய தகவல்களின் அடிப்படையில் சோதனைச் சாவடிகளை அமைத்ததாகவும், இதன் விளைவாக துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற என்கவுண்டர் சம்பவங்களில், 34 குற்றவாளிகள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் தங்கள் அறிக்கைகளில், எச்சரிக்கைகளை வழங்கிய பின்னரும், குற்றம் சாட்டப்பட்டவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் தான், அவர்களின் கால்களில் சுட்டதாகக் கூறுகின்றனர். அவர்களிடம் இருந்து 30-.32 போர் (வெளிநாட்டு அல்லது நாட்டில் தயாரிக்கப்பட்ட) கைத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் முழுவதும் மோதல்கள் பரவியுள்ளன. பதிண்டா, ஃபரித்கோட், முக்த்சர், மோகா, ஹோஷியார்பூர், ஃபாசில்கா, தலா 1; பாட்டியாலா, படாலா, கன்னா, ஃபெரோஸ்பூர், மொஹாலி, டர்ன் தரன் மற்றும் ஜலந்தரில் தலா 2 ; லூதியானாவில் ஐந்து ; அமிர்தசரஸ் மாவட்டத்தில் 9 இடங்களில் இதுபோன்ற மோதல்கள் அதிகம் நடந்துள்ளன.
ஜூலை 2025 இல், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 20 என்கவுண்டர்களைக் கண்டதாகவும், அதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏற்கனவே காவலில் வைக்கப்பட்டு, "மீட்பதற்காக" காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டபோது என்கவுண்டர்கள் நடந்ததாகவும் செய்தி வெளியிட்டது. இந்த என்கவுண்டரில் 5 பேர் மரணமடைந்தனர். இதன் அடிப்படையில்தான் ஒரு வழக்கறிஞர் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் சென்றார். 2024 ஆம் ஆண்டில், பஞ்சாப் காவல்துறை 64 என்கவுண்டர்களைப் பதிவு செய்தது, இதில் ஒரு போலீஸ்காரர் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்களில் 56 குற்றம் சாட்டப்பட்டவர்களும் 9 போலீஸ்காரர்களும் காயமடைந்தனர்.
கடைசியாக ஞாயிற்றுக்கிழமை மோகாவில் நடந்த என்கவுன்டரில், கடந்த வாரம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேரை போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்தனர்.
பஞ்சாபில் நடந்ததாகக் கூறப்படும் போலி என்கவுண்டர்களுக்கு எதிராக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை (NHRC) அணுகிய வழக்கறிஞர் நிகில் சரஃப், “உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின்படி, ஒரு போலீஸ் என்கவுண்டரில் குற்றம் சாட்டப்பட்டவர் பலத்த காயங்களுக்கு ஆளானால், என்கவுண்டரில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிக்கு, மூத்த பதவியில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரியால் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். உயிரிழப்பு குறித்து புகார் அளிக்கப்பட்டால், ஒரு மாஜிஸ்திரேட் விசாரணை அவசியம். ஆனால் பஞ்சாபில் எதுவும் பின்பற்றப்படுவதில்லை என கூறியுள்ளார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/02/19/punjab-police-encounter-cases-2026-02-19-10-28-54.webp)
1990களில் இருந்து பஞ்சாப் மாநிலத்தில் போலி என்கவுண்டர் வழக்குகளைத் தொடர்ந்து வரும் சர்ப்ஜித் சிங் வெர்கா, அதற்கு "அரசியல் புகலிடம்" இருப்பதாகக் கூறினார். "ஒரு என்கவுண்டர் நேர்மையானதாக இருந்தாலும், சட்டப்பூர்வமாக முறையான விசாரணை தேவை. விவரங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பதால், நீதித்துறை அத்தகைய என்கவுண்டர்களை கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
நவம்பர் 2025: தற்காப்பு என்ற அதே காரணம்
நவம்பர் 11: கொலைக் குற்றத்திற்காகத் தேடப்பட்டு வந்த ஹர்கரன் சிங் மற்றும் குர்தேஜ் சிங் ஆகியோர் கன்னா போலீசாருடன் நடந்த மோதலில் காயமடைந்தனர். பின்னர் கன்னா எஸ்.எஸ்.பி ஜோதி யாதவ் கூறுகையில், ஹர்கரன் "ஆயுதங்களை மீட்க அழைத்துச் செல்லப்பட்டபோது ஒரு போலீஸ் குழுவை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினார். ஒரு சப்-இன்ஸ்பெக்டரைத் தாக்கினார். இதனால் தற்காப்புக்காக, எஸ்.ஐ ஒரு ரவுண்டு சுட்டார், அது ஹர்கரன் சிங்கின் காலில் பட்டது." குர்தேஜ் முதல் மாடியில் இருந்து குதித்து காயமடைந்ததாக கூறியிருந்தார்.
நவம்பர் 12: துப்பாக்கிச் சண்டையின் போது கோல்டி தில்லான் கும்பலைச் சேர்ந்த சரண்ஜித் சிங் மற்றும் அமன் குமார் ஆகிய இரண்டு பேர் - காயமடைந்ததாக தேரா பாசி காவல்துறை தெரிவித்துள்ளது. இருவரும் போலீஸ் சோதனைச் சாவடியைத் தவிர்க்க முயன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக எஸ்எஸ்பி ஹர்மன்தீப் ஹான்ஸ் தெரிவித்தார். இதனால் தற்காப்பு விதமாக விதமாக, அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர், குற்றம் சாட்டப்பட்ட இருவரின் கால்களிலும் சுடப்பட்டது.
நவம்பர் 15: பிரப் தசுவால் கும்பலின் கூட்டாளி என்று கூறப்படும் அர்ஷ்தீப் சிங்கை என்கவுன்டருக்குப் பிறகு கைது செய்ததாக போலீசார் கூறினர் . “அவர் ஃபரித்கோட்டில் இருப்பதாகவும், ஒரு பெரிய சதிச்செயல் செய்ய திட்டமிடுவதாகவும் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், போலீசார் சோதனைச் சாவடி அமைத்தனர். அப்போது அங்கு வந்த அவரிடம் அதிகாரிகள் அவரது மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சைகை செய்தபோது, அவர் குழுவைத் தாக்கினார் என்று ஃபரித்கோட் போலீசார் தெரிவித்தனர்.
நவம்பர் 19, 26: ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, நவம்பர் 15 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். தொழிலாளி பல்தேவ் ராஜ் அரோராவின் மகன் நவீன் அரோரா கொலைக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் ஜதின் காளி மற்றும் அவரது மூன்று கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், எங்கள் குழு வேகமாகச் செல்லும் மோட்டார் சைக்கிளைக் கவனித்தது, நிறுத்துமாறு நாங்கள் சிக்னல் செய்தும் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை அப்போது ஓட்டுநர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். தற்காப்புக்காக காவல்துறையினர் திருப்பிச் சுட்டனர், இதனால் காளி காயமடைந்தார் என எஸ்எஸ்பி பூபிந்தர் சிங் சித்து கூறினார்:
அதே வழக்கில், நவம்பர் 26 அன்று நடந்த 2-வது என்கவுண்டரில், முக்கிய துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் பாதலை, ஜிராவில் இருந்து போலீசார் கைது செய்தனர். இது குறித்து ஃபெரோஸ்பூர் காவல்துறை தரப்பில் கூறியபடி, ஆயுதங்களை மீட்பதற்காக சென்றபோது மாமு ஜோயா கிராமத்தில் பாதலுடன் ஒரு குழு இருந்தது. அப்போது, அவரது கூட்டாளிகள் இருவர் "அங்கு மறைந்திருந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒரு தலைமைக் காவலர் மீது ஒரு குண்டு பாய்ந்தது. பதிலடியாக போலீசார் சுட்டனர், இதில் பாதல் இறந்தார் என ஃபெரோஸ்பூர் ரேஞ்ச் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஹர்மன்பீர் சிங் கூறினார்:
தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இரண்டு பேரும் தப்பிச் சென்றதாக டிஐஜி கூறினார். காவல்துறையினர் தங்கள் மற்றொரு நபரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், ஆனால் குண்டு அவரது குண்டு துளைக்காத ஜாக்கெட்டைத் துளைத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
நவம்பர் 20: லூதியானா காவல்துறை, ஐ.எஸ்.ஐ. ஆதரவுடன் குண்டர் கும்பல் லாரன்ஸ் பிஷ்னோயுடன் தொடர்புகளைக் கொண்ட ஒரு குண்டர் பயங்கரவாத கும்பலை கண்டுபிடித்தது, லதோவல் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையைத் தொடர்ந்து தீபக் மற்றும் ராம் லால் கைது செய்யப்பட்டனர். ராம் லால் காயமடைந்தார். இது குறித்து லூதியானா காவல் ஆணையர் ஸ்வபன் சர்மா கூறுகையில், ரகசியமாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அவர்களை வழிமறித்தபோது இருவரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். "சில தோட்டாக்கள் ஒரு காவல் வாகனத்தைத் தாக்கின," என்று அந்த அதிகாரி கூறினார்.
நவம்பர் 20: அதே நாளில், 13 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த பிரபலமான கும்பல் ஹர்ஜிந்தர் சிங் என்கவுண்டரில் கொல்லப்பட்டதன் மூலம் ஒரு கொலை குற்றம் நிகழாமல் தடுத்ததாக அமிர்தசரஸ் காவல்துறை கூறியது. ஹர்ஜிந்தர் மற்றும் அவரது கூட்டாளி ஒரு போலீஸ் சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர், "தற்காப்புக்காக" சுடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தோட்டாக்களில் ஒன்று போலீஸ் வாகனத்தைத் தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நவம்பர் 23: பம்பிஹா கும்பலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நபாவைச் சேர்ந்த ஹர்ப்ரீத் சிங் மற்றும் கௌதம் பாட்ஷா ஆகியோர் என்கவுண்டரில் காயமடைந்தனர். பாட்டியாலா எஸ்எஸ்பி வருண் சர்மா, ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனைச் சாவடியை அமைத்தோம். அப்போது அங்கு வந்த அவர்களிடம் சரணடையுமாறு கேட்டபோது, இருவரும் காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். போலீசார், மிகுந்த நிதானத்தைக் காட்டி, பதிலளித்து, இருவரின் காலிலும் சுட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
நவம்பர் 23: அதே நாளில், மல்கித் சிங் என்பவர் படாலா போலீஸ் காவலில் இருந்து தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் போது காயமடைந்தார். குண்டர் கும்பல் அம்ரித் தலாமின் முக்கிய கூட்டாளிகள் மல்கித் மற்றும் விஜய் மாசிஹ் ஆகியோரை கைது செய்ததாக டிஜிபி யாதவ் கூறினார். அப்போது, மல்கித் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதத்தை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தினார் ஒரு சிறிய துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு அவர் வீழ்த்தப்பட்டார் என போலீசார் தெரிவித்தனர்.
நவம்பர் 26: ஒரு என்கவுன்டரை தொடர்ந்து, கும்பல் உறுப்பினராகவும் கொள்ளைக் குற்றவாளியாகவும் கருதப்படும் கவால்ஜித் சிங்கை படாலா காவல்துறை கைது செய்தது. விசாரணைகளின் அடிப்படையில், காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டவரைத் தடுத்து நிறுத்த முடிந்தது. அவரைப் பிடிக்க முயன்றபோது, காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் காவல்ஜித்தின் இடது காலில் சுடப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புத் துறை டிஐஜி சந்தீப் கோயல் கூறினார்.
டிசம்பர் 2025: காலை குறிவைத்தல்
டிசம்பர் 4: கொலைக் குற்றத்திற்காகத் தேடப்பட்டு வந்த தலேர் சிங், அமிர்தசரஸில் போலீஸ் காவலில் இருந்தபோது நடந்த என்கவுண்டரில் காயமடைந்தார். இது குறித்து போலீஸ் கமிஷனர் குர்பிரீத் சிங் புல்லர் கூறுகையில், "ஒரு துப்பாக்கியை மீட்டெடுப்பதற்காக டேலரை போலீசார் அழைத்துச் சென்றனர். அவர் புதரில் இருந்து ஒரு துப்பாக்கி எடுத்து காவல்துறையினரை நோக்கிச் சுட்டார். இறுதியாக டேலரின் வலது காலில் சுடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
டிசம்பர் 6: ஸ்ரீ முக்த்சர் சாஹிப் காவல்துறையினர் ஒரு மைனர் பெண்ணை கடத்தி கொலை செய்த வழக்கை சில மணி நேரங்களுக்குள் தீர்த்துவிட்டதாகக் கூறினர், மேலும் இந்த வழக்கில் ஒரு என்கவுண்டருக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்ட முகேஷ் குமாரைக் கைது செய்தனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, "குற்றம் சாட்டப்பட்டவர் தப்பி ஓட முயன்றபோது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறியுள்ளனர்.
டிசம்பர் 12 : அமெரிக்காவைச் சேர்ந்த கும்பல் பிரப் தசுவாலின் உதவியாளரான குர்பிந்தர் சிங் என்கிற கிண்டி என்பவரை மோகா போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காயமடைந்ததாக தெரிவித்தனர். மோகா எஸ்எஸ்பி அஜய் காந்தி கூறுகையில், "குற்றவாளியை ஒரு போலீஸ் குழு தடுத்து நிறுத்தியபோது துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்று கூறியுள்ளார்.
டிசம்பர் 12: அதே நாளில், லூதியானா போலீசாருடன் நடந்த "மோதலுக்கு" பிறகு, கும்பல் அம்ரித் தலாமின் கூட்டாளியாகக் கூறப்படும் ரோஹின் மான்சி கைது செய்யப்பட்டார். இது பற்றி டி.சி.பி ஜஸ்கிரஞ்சித் சிங் தேஜா கூறுகையில், "துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரையும் பிடிக்க போலீசார் ஒரு பொறியை அமைத்தனர். இதில் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் மாசியின் காலில் சுடப்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 15: அஜ்னாலாவில் நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, வான்ஷ்பிரீத் சிங் மற்றும் பூபிந்தர் சிங் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமிர்தசரஸ் கிராமப்புற காவல்துறை பல மிரட்டி பணம் பறித்தல் மற்றும் கொள்ளை வழக்குகளை முறியடித்ததாகக் கூறியது.
இது குறித்து எல்லைப் பாதுகாப்புத் துறை டிஐஜி சந்தீப் கோயல் கூறுகையில், ஒரு ரகசிய தகவலின் பேரில், சஹார்பூர் கிராமத்தில் ஒரு சோதனைச்சாவடி அமைத்தோம். அங்கு காவல்துறையினரை கண்டதும் அவர்களை வேகமாக ஓடினர், போலீசார் துரத்தினர். அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில், அந்த நபர்கள் மயிரிழையில் தப்பினர், ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் காலில் சுடப்பட்டதாக தெரிவித்தார்.
டிசம்பர் 17: அமிர்தசரஸில் ஆயுதங்களை மீட்கும் போது, நிர்மல்ஜோத் சிங் என்ற குற்றவாளி காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. காவல் ஆணையர் குர்பிரீத் சிங் புல்லர் கூறுகையில், "குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில், போலீசார் நிர்மல்ஜோத் சிங், மன்பிரீத் சிங் மற்றும் கரன்தீப் சிங் ஆகியோரைக் கைது செய்தனர். ஒரு நாட்டுத் துப்பாக்கியை மீட்கும் போது, நிர்மல்ஜோத் ஒரு போலீஸ் காவலரைத் தள்ளிவிட்டு, ஒரு கார்பைனைப் பறித்து, போலீஸ் பணியாளர்களை நோக்கிச் சுட முயன்றார். அப்போது ஏ.எஸ்.ஐ நவ்தேஜ் சிங் தற்காப்புக்காக திருப்பிச் சுட்டார், நிர்மல்ஜோத்தின் இடது காலில் குண்டு பாய்ந்தாக தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 26: அமிர்தசரஸ் நகர காவல்துறையினர் தகன மைதானத்திற்கு அருகில் ஆயுதங்களை மீட்டெடுப்பதற்காக அழைத்துச் சென்றபோது, நடந்த "என்கவுண்டரில்" அமிர்தபால் சிங் ரோனி காயமடைந்தார். "குற்றம் சாட்டப்பட்டவர் திடீரென துப்பாக்கியை எடுத்து ஏஎஸ்ஐ ஜெய்பீர் சிங் மீது சுட்டார். தற்காப்புக்காக, ஏஎஸ்ஐ தல்விந்தர் சிங் ஒரு ரவுண்டு சுட்டார். என்று அமிர்தசரஸ் காவல் ஆணையர் குர்பிரீத் சிங் புல்லர் கூறினார்.
டிசம்பர் 27: ராஜ்கர் கிராமத்தின் சர்பஞ்ச் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் இரண்டு குற்றவாளிகள் கன்னா போலீசாரால் என்கவுன்டருக்கு பிறகு கைது செய்யப்பட்டனர். பின்னர் கன்னா எஸ்எஸ்பி ஜோதி யாதவ், இந்தர்ஜித் சிங் மற்றும் குர்வீர் சிங்கைப் பிடிக்க போலீசார் ஒரு பொறியை அமைத்ததாகவும், ஆனால் அவர்கள் "தப்பிக்க முயன்றதாகவும் இதில், போலீசார் துரத்தலுக்குப் பிறகு குர்வீரை கைது செய்ததாக எஸ்எஸ்பி கூறினார், ஆனால் இந்தர்ஜித் துப்பாக்கிச் சூடு நடத்தினார், மேலும் இரண்டு தோட்டாக்கள் போலீஸ் வாகனத்தில் பட்டன. போலீசார் பதிலடி கொடுத்தனர், இந்தர்ஜித்தின் காலில் காயம் ஏற்பட்டது என்று யாதவ் கூறினார்.
டிசம்பர் 28: கர்ஷங்கருக்கு அருகிலுள்ள ஒரு காட்டுப் பகுதியில் நடந்த என்கவுன்டரை தொடர்ந்து ஹோஷியார்பூர் காவல்துறையினர் மூன்று கொள்ளை குற்றவாளிகளைக் கைது செய்தனர். டிஎஸ்பி தல்ஜீத் சிங் காக் கூறுகையில், வாகனத்தை நிறுத்துமாறு சைகை செய்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். எச்சரிக்கை விடுத்த பின்னர் போலீசார் பதிலடி கொடுத்தனர். கோரா எனப்படும் ஓங்கர் சிங்கிற்கு துப்பாக்கிச் சூட்டு காயம் ஏற்பட்டது என கூறியுள்ளனர்.
ஜனவரி 2026: தப்பி ஓட முயற்சி
ஜனவரி 6: குண்டர் கும்பல் பிரப் தசுவால் மற்றும் அஃப்ரிடி ஆகியோரின் நெருங்கிய கூட்டாளியாகக் கூறப்படும் ஹர்னூர், டர்ன் தரன் மாவட்டத்தில் நடந்த ஒரு மோதலில் கொல்லப்பட்டார். எல்லைப் பாதுகாப்புப் பிரிவு டிஐஜி ஸ்னேஹ்தீப் சர்மா கூறுகையில், நூர் மோட்டார் சைக்கிளில் பயணிப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், ஒரு கூட்டுக் குழு அவரை வழிமறித்தது, ஆனால் அவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். ஒரு போலீஸ்காரர் மீது ஒரு தோட்டா தாக்கியது, ஆனால் அவரது குண்டு துளைக்காத ஜாக்கெட் காரணமாக அவர் தப்பினார். துப்பாக்கிச்சூட்டில் நூர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார் என தெரிவித்துள்ளனர்.
ஜனவரி 7: ஆயுதங்களை மீட்க அழைத்துச் செல்லப்பட்டபோது, தப்பி ஓட முயன்றதால், என்கவுண்டரில் காயமடைந்ததாக அமிர்தசரஸ் காவல்துறை தெரிவித்துள்ளது. அமிர்தசரஸ் காவல்துறை ஆணையர் குர்பிரீத் சிங் புல்லர் கூறுகையில், “லால் படாலா சாலை அருகே அழைத்துச் செல்லப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். பதிலடி கொடுக்கும் விதமாக, போலீசார் குற்றம் சாட்டப்பட்டவரை நோக்கிச் சுட்டனர் என கூறியுள்ளனர்.
ஜனவரி 12: லூதியானா காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு ரோஹித் கோதாரா கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து கமிஷனர் ஸ்வபன் சர்மா கூறுகையில், மூவரும் ஒரு சோதனைச் சாவடியை உடைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளான இருவரும் சுமித் குமார் மற்றும் சஞ்சு என அடையாளம் காணப்பட்டனர் என கூறியுள்ளார்.
ஜனவரி 14: பிரப் தசுவால் கும்பலுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளியும், பல கொலைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் சுக்ராஜ் சிங் என்கிற குங்கா, அமிர்தசரஸின் வல்லா பகுதியில் ஒரு சர்வீஸ் துப்பாக்கியைப் பறிக்க முயன்றதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
மீட்பு நடவடிக்கைகளின் போது கங்காவை விடுவிக்கும் முயற்சியில் இரண்டு அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். இதில் ஒரு போலீஸ்காரர் காயமடைந்த நிலையில், கங்கா ஏ.எஸ்.ஐ ஹர்ஜிந்தர் சிங்கிடமிருந்து ஒரு துப்பாக்கியைப் பறிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. மூன்று துப்பாக்கிச் சூடுகள் சுடப்பட்டன. ஒன்று போலீஸ் வாகனத்தில் மோதியது, இரண்டு துப்பாக்கிச் சூடுகள் குங்காவைத் தாக்கின. இதனால் காயமடைந்த அவர் மருத்துவமனையில் இறந்தார்.
ஜனவரி 17: கபடி விளம்பரதாரர் ராணா பாலசௌரியாவை மக்கள் நிறைந்த மைதானத்தின் முன் கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்ட கரண் பதக் என்ற கரண் தப்பி ஒட முயன்றபோது ஒரு என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது பற்றி கூறிய காவல்துறையினர் தங்கள் காவலில் இருந்து தப்பிக்க முயன்றதாக கூறினர். ஒரு அறிக்கையில், பதக் இரவில் கடுமையான மார்பு வலி இருப்பதாக புகார் அளித்ததாகவும், அரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, போலீஸ் வேன் ஒரு மீடியனில் மோதியதால் அவர் தப்பி ஓடிவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
அந்த நேரத்தில் பதக் கைவிலங்கு போடப்பட்டதாகவும், மூன்று போலீசார் அவரை அழைத்துச் சென்றதாகவும் போலீசார் ஒப்புக்கொண்டனர். காலை 6 மணியளவில் கரரில் உள்ள ஒரு இடத்தில் அவர் கண்டுபிடிக்கப்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. பதக் காலில் அடிபட்டதாகவும், ஒரு அதிகாரி காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். பதக் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஜனவரி 18: கட்டார் சிங் வாலா கிராமத்திற்கு அருகே ஒரு சோதனைச் சாவடியில் துப்புரவுத் தகவலின் பேரில் என்கவுன்டருக்கு பிறகு, ரூ.1 கோடி மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்படும் சேவக் சிங்கைக் கைது செய்ததாக பதிண்டா போலீசார் தெரிவித்தனர்.
ஜனவரி 18: அதே நாளில், ஜலந்தர் போலீஸ் காவலில் இருந்தபோது நடந்த என்கவுன்டரில், சந்திர சேகர் மற்றும் ஜஸ்பால் சிங் ஆகிய இரண்டு குற்றவாளிகள் காயமடைந்தனர். ஜனவரி 16 கொலைக்கு தேடப்பட்டவர்கள் தங்கள் ஆயுதங்களை மீட்டெடுக்க ஒரு இடத்திற்கு வருவார்கள் என்று தங்களுக்கு தகவல் கிடைத்ததாக ஜலந்தர் கிராமப்புற எஸ்.எஸ்.பி. ஹர்விந்தர் சிங் விர்க் கூறினார். "காவல்துறை குழுக்கள் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தன. போலீஸ் குழு அவர்களை நெருங்கி வந்தபோது குற்றம் சாட்டப்பட்டவர்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீட்டு, தப்பி ஓட முயன்றனர், துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஒரு குண்டு போலீஸ் வாகனத்தைத் தாக்கியதாகவும், மற்றொன்று மரத்தில் மோதியதாகவும், மூன்றில் ஒரு குண்டு இலக்கைத் தவறவிட்டதாகவும் போலீசார் தற்காப்புக்காக சுட்டனர் என்றும் கூறியுள்ளனர்.
ஜனவரி 19 : லூதியானாவின் டோராஹாவில் ஒரு மோதல் நடந்ததாக காவல்துறை அறிக்கை கூறியது: “ஸ்கார்பியோவில் பயணித்த இரண்டு குற்றவாளிகள் ஒரு போலீஸ் ஜீப்பை மோதினர். இதில் அவர்கள் மூன்று சுற்றுகள் சுட்டனர், அதில் ஒன்று ஒரு எஸ்.எச்.ஓவின் மார்பில் தாக்கியது, ஆனால் அவரது குண்டு துளைக்காத ஜாக்கெட் காரணமாக அவர் காப்பாற்றப்பட்டார். பதிலடி கொடுக்கும் விதமாக, எஸ்.எச்.ஓ.வும் திருப்பிச் சுட்டார், இதில் குற்றவாளிகளில் ஒருவரான ஹர்சிம்ரன் என்கிற மந்த் காலில் காயம் அடைந்தார் என்று கூறியுள்ளனர்.
ஜனவரி 20: கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கும்பல் தலைவர் பிரீத்பால் சிங்குடன் அர்னிவாலா கிராமத்திற்கு அருகே ஃபாசில்கா போலீசார் என்கவுன்டரில் ஈடுபட்டனர், இதன் விளைவாக அவர் கைது செய்யப்பட்டார். அவரது முழங்காலில் குண்டு காயம் ஏற்பட்டது, சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார் என்று ஃபெரோஸ்பூர் ரேஞ்ச் டிஐஜி ஸ்னேஹ்தீப் சர்மா தெரிவித்தார்.
ஜனவரி 20: அதே நாளில், சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ள அட்டாரி அருகே நடந்த மோதலுக்குப் பிறகு, குண்டர் கும்பல் மணி பிரின்ஸை போலீசார் சுட்டுக் கொன்றனர். ஒரு ரகசிய தகவலின் பேரில், அவர்கள் அந்தப் பகுதியில் ஒரு பொறியை வைத்ததாக போலீசார் தெரிவித்தனர். பிரின்ஸ் அவர்களைக் கண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், ஆனால் குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் காவல்துறையினர் அணிந்திருந்ததால் காயமடையவில்லை. ஆனால் பதிலடித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஜனவரி 22: பாட்டியாலாவில் நடந்த ஒரு என்கவுண்டரில் குண்டர் கும்பல் ஹர்ஜிந்தர் சிங் லாடி காயமடைந்தார். டிஐஜி குல்தீப் சிங் சாஹல் கூறுகையில், ஒரு ரகசிய தகவலைத் தொடர்ந்து அவர்கள் ஒரு புறவழிச்சாலையில் ஒரு சோதனைச் சாவடியை அமைத்து ஹர்ஜிந்தரைத் தடுக்க முயன்றபோது அவர் சுடத் தொடங்கியதால் காவலர்களும் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
ஜனவரி 23: ஒரு மோதலைத் தொடர்ந்து, ஜலந்தர் கிராமப்புற போலீசார் டிசம்பர் 2025 துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்காக தேடப்பட்டு வந்த லவ்ப்ரீத் சிங்கை கைது செய்தனர். குறிப்பிட்ட தகவலின் பேரில், அல்வால்பூர் அருகே ஒரு போலீஸ் குழு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது சந்தேக நபர் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், அவர் போலீஸ் குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். பதில் தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டவரின் வலது கையில் குண்டு காயம் ஏற்பட்டது," என்று போலீசார் தெரிவித்தனர்.
ஜனவரி 23: அதே நாளில், கைரோன் கிராமத்திற்கு அருகே நடந்த ஒரு என்கவுண்டருக்குப் பிறகு, கும்பல் ஜக்தார் சிங் என்கிற ஜக்கா பட்டுவை கைது செய்ததாக டர்ன் தரன் காவல்துறை தெரிவித்துள்ளது. "கைரோன் கிராமத்திற்கு அருகிலுள்ள கால்வாய்க்கு ஆயுதத்தை மீட்க போலீசார் ஜக்கா பட்டுவை அழைத்து வந்தனர், அப்போது குற்றம் சாட்டப்பட்டவர் இரண்டு சுற்றுகள் சுட்டார் இதனால் காவல்துறை பதில் தாக்குதல் நடத்தியதாக டர்ன் தரன் காவல்துறை எஸ்எஸ்பி சுரேந்திர லம்பா கூறினார்.
ஜனவரி 24: லூதியானாவின் சதார் காவல் நிலைய எல்லைக்குள் நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்று கூறப்படும் நான்கு பேரை கைது செய்ததாக போதைப்பொருள் தடுப்புப் பணிக்குழு தெரிவித்துள்ளது. இதில் 305 கிராம் ஹெராயினை மீட்டதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர் காவல்துறை சோதனைச் சாவடியை உடைக்க முயன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், தற்காப்புக்காக போலீசார் பதிலடி தாக்குதல் நடத்தியதாகவும், அப்போது குற்றம் சாட்டப்பட்ட தரன்பிரீத் சிங்கிற்கு இடுப்பில் குண்டு காயம் ஏற்பட்டது" என்று போலீசார் தெரிவித்தனர்.
ஜனவரி 29: குற்றம் சாட்டப்பட்ட ஜோபன்ஜீத் ஒரு போலீஸ் அதிகாரியின் சர்வீஸ் பிஸ்டலைப் பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றதாகவும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட போராட்டத்தில் அவரது காலில் சுடப்பட்டதாகவும் அமிர்தசரஸ் போலீசார் தெரிவித்தனர். ஜோபன்ஜீத்தை அவரது கூட்டாளிகளைத் தேடுவதற்காக போலீசார் அழைத்துச் சென்றனர். குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறினார். போலீசார் வாகனத்தை நிறுத்தியவுடன், அவர் எங்கள் பணியாளர்களில் ஒருவரிடமிருந்து சர்வீஸ் ஆயுதத்தைப் பறிக்க முயன்றார்," என்று போலீஸ் கமிஷனர் குர்பிரீத் சிங் புல்லர் கூறினார்
source https://tamil.indianexpress.com/india/34-encounters-in-3-months-in-punjab-a-third-in-police-custod-11132242





