ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

பறக்கும் சூப்பர்சோனிக் விமானத்தை தட்டித் தூக்கிய துருக்கி.. ட்ரோன் மூலம் செய்த முரட்டு சம்பவம்!

 

trne

வடக்கு துருக்கியில் உள்ள ஒரு சோதனைப் பயிற்சி தளத்தில் பரிசோதனையில் உள்ள ட்ரோன் ஒன்று இதுவரை விமானிகள் மட்டுமே செய்து வந்த செயலை செய்து காட்டி சாதனை படைத்துள்ளது. அதாவது, வானில் அதிவேக ஜெட் வேகத்தில் பாயும் இலக்கை தானாகவே கண்டுபிடித்து கண்காணித்து முற்றிலும் மனித உதவியின்றி அழித்துள்ளது.



source https://tamil.indianexpress.com/international/drone-to-shoot-down-a-moving-supersonic-target-11144385

அதாவது, Bayraktar Kızılelma என்ற ட்ரோன் சூப்பர் சோனிக் விமானத்தை துல்லியமாக தாக்கியுள்ளது. சமீபத்தில் துருக்கியின் கருங்கடல் கடற்கரையில் உள்ள Sinop அருகே நடைபெற்ற சோதனை நடவடிக்கையின் போது இது நிகழ்ந்தது. இதுவரை ட்ரோன்கள் என்றால் மெதுவாக, பொறுமையாக வானில் பறக்கும் வேட்டைக்காரர்கள் போன்று பார்க்கப்பட்டது. ஆனால், Bayraktar Kızılelma  இந்த கருத்தை மொத்தமாக மாற்றியுள்ளது.

Bayraktar Kızılelma   ட்ரோன்  சோதனையின் போது தனது உட்புற சென்சார்கள் மூலம் இலக்கை கண்டறிந்து அதை துரத்தி “லாக் - ஆன்” செய்து ஏவுகணையை பாய்ச்சியது. இதெல்லாம்  மனித விமானி இல்லாமல் முழுமையாக தானியங்கி முறையில் நடைபெற்றது. Bayraktar Kızılelma என்ற பெயருக்கு ‘சிவப்பு ஆப்பிள்’ என்று அர்த்தம். இது துருக்கி புராணங்களில் இருந்து எடுக்கப்பட்ட பெயராகும்.

ட்ரோன் வடிவமைப்பு

ஆறு டன்னுக்கும் அதிக எடையுடைய Bayraktar Kızılelma ட்ரோன், உக்ரைன் அல்லது மத்திய கிழக்கில் காணப்பட்ட புரொபெல்லர் இயந்திர ட்ரோன்களைப் போல அல்லாமல்  ஒரு இலகுரக போர் ஜெட்டிற்கு இணையான வடிவமைப்பை கொண்டுள்ளது. இதில் மேம்பட்ட ஏ.இ.எஸ்.ஏ  (Active Electronically Scanned Array) ரேடார், நவீன அவியோனிக்ஸ் அமைப்புகள் மற்றும் பல்வேறு சென்சார்கள் இணைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் உட்புற செயற்கை நுண்ணறிவு அமைப்புடன் இணைந்து தற்காலிக போர் முடிவுகளை எடுக்க உதவுகின்றன.

2021-ஆம் ஆண்டு Baykar நிறுவனம் இந்த திட்டத்தை முதன்முறையாக அறிமுகப்படுத்தியது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, Bayraktar Kızılelma என்ற ட்ரோனை உருவாக்கியுள்ளது. இந்த ட்ரோன் ஏற்கனவே டேக் ஆஃப், பறக்கும் வரம்பு தொடர்பான பல சோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.