சனி, 5 டிசம்பர், 2015

தமிழக அரசு கேட்ட தொகை 5 ஆயிரம் கோடி!

தமிழக அரசு கேட்ட தொகை 5 ஆயிரம் கோடி!
மோடி அரசு கொடுத்திருப்பதோ 2 ஆயிரம் கோடி!!
இந்திய அரசு தமிழகத்தில் இருந்து பெறும் தொகையோ
ஒவ்வொரு வருடமும் 85ஆயிரம் கோடி ரூபா!!!
இதுவரை 900 பேர் மழையால் பலியாகியுள்ளார்கள்
பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
வரலாறு காணாத பேரிழப்பு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்திய அரசும் தமிழக அரசும் மக்களைக் காக்க தவறியதுடன் உரிய நிவாரணங்களையும் அளிக்காமல் இருக்கின்றன.
பிரதமர் மோடி கெலிகப்டரில் சென்னையை சுற்றிப் பார்த்தாராம்.
அதில்கூட போட்டோசொப் மோசடி செய்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
முதலமைச்சர் தொகுதியில்கூட உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை.
ஆத்திரம் கொண்ட மக்கள் இரண்டு அமைச்சர்களை விரட்டியடித்துள்ளனர்.
வரி வசூலித்த அரசுகள் மக்களுக்கு ஒரு உதவியும் செய்யவில்லை.
மக்கள் தாங்களாகவே ஒருவருக்கொருவர் உதவி வருகின்றனர்.
முகநூல் , டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பெருமைப்படக்கூடிய வகையில் பங்காற்றுகின்றனர்.
மனிதாபிமானம் இன்னும் மரணித்துவிடவில்லை என்பதை இவை எடுத்துக்காட்டுகின்றன.
Puradsifm's photo.

Related Posts: