**************************************
தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, விஷக் காய்ச்சல் பரவி வருகின்றது. இதனை தடுக்கும் விதமாக SDPI கட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நாகை வடக்கு மாவட்டம் தேரிழந்தூரில் SDPI கட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது, இதன்மூலம் 950 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் தமிஜுதீன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் ரியாஸ், பொருளாளர் அம்ருல்லா, து.செயலாளர் அர்சத், பெருமாள் கோவில் ஊராட்சி துணை தலைவர் சங்கர் அனைவரும் முன்னிலை வகித்தனர்.