கோபி செட்டிபாளயத்தை சேர்ந்த ‘தங்கம் கேட்டரிங் நிறுவனத்தார்’, 10 பேர் எங்கள் ஊர் திருமண மண்டபத்தில் தங்கி, உணவு பொட்டலங்கள் தயாரித்து வருகின்றனர்.கடந்த மூன்று நாட்களாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலம் வழங்கி வருகிறோம்.
இரண்டு நாட்களில் சென்னை மற்றும் கடலூரை சேர்ந்த15,000 பேருக்கு உணவளித்துள்ளோம்.
என்னிடம் இந்த குழுவை அனுப்பி வைத்த Ganeshkumar அவர்களுக்கு என்னுடைய மிகப் பெரிய நன்றி.அவர் மற்றும் அவரது ஊரை சேர்ந்த என்னற்ற பொது மக்கள் பொருள்கள் மற்றும் பணம் அனுப்பி,இந்த சேவை சிறப்பாக நடைபெற உதவினர்.அவர்களுக்கும் என் நன்றி.
கொஞ்ச நேரம் கூட ஓய்வெடுக்காமல்,பம்பரமாக வேலை செய்த தங்கம் கேட்டரிங் நிறுவனத்தின் உரிமையாளர் திரு.சரவண ராஜ்குமார் மற்றும் அவரது துணைவியார் தங்கம் அவர்களுக்கும் என் நன்றி.
நாளையும் எங்கள் பணி தொடரும்,என்று மீண்டும் அடுப்படியில் வேக கிளம்பிய,அவர்கள் டீமுக்கு மிகப் பெரிய சல்யூட்...
இந்த சேவைக்கு முழு காரணமும் கோபி செட்டி பாளையம் மக்களும்,கணேஷ் குமார் மற்றும் சரவண ராஜ்குமார் அவர்கள்.அனைவருக்கும் திண்டிவனம் பொது மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் கடலூர் மக்கள் சார்பாக நன்றிகள்.