
நொய்டாவை மையமாகக் கொண்டு செயல்படும் “ரிங்கிங் பெல்ஸ்” நிறுவனம் ரூபாய் 500-க்கும் குறைவான விலையில் ஸ்மார்ட் போனை விற்பனை செய்யப்போவதாக அறிவித்திருந்தது. இதனையடுத்து, தற்போது, “ப்ரீடம் 251” என்ற அந்த ஸ்மார்ட்போனை 251 ரூபாய்க்கு அந்நிறுவனம் இன்று அறிமுகம் செய்கிறது. இது உலகிலேயே மிக மலிவான ஸ்மார்ட் போன் ஆகும்.
அந்நிறுவனத்தின் வலைத்தளத்தில் “ப்ரீடம் 251”(Freedom 251) ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள்:
4 இண்ச் டிஸ்ப்ளே, 8 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் (32 ஜிபி வரை விரிவுபடுத்தலாம்), 3.2 மெகாபிக்சல் பின்பக்க கேமரா, 0.3 மெகாபிக்சல் முன்பக்க கேமரா, 1450 mAh பேட்டரி..
இன்று நடைபெறும் ஸ்மார்ட் போனின் அறிமுக விழாவில் முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.