சனி, 12 டிசம்பர், 2015

தவ்ஹீத் ஜமாஅத்துக்கு தண்ணீர் கொடுத்தோம்


ஆர்.எஸ்.எஸ். இயக்க வெறியன் சேகர் என்பவரின் அக்மார்க் பொய்.
புரசைவாக்கம் தவ்ஹீத் ஜமாஅத்காரர்கள் நிவாரணம் வழங்க தண்ணீர் கிடைக்கவில்லை என்று சேவா பாரதியை (ஆர். எஸ். எஸ் அமைப்பு) தொடர்பு கொண்ட போது சேவாபாரதியில் இருந்து ஐந்தாயிரம் தண்ணீர் பாட்டில் கொடுத்தோம் என்று அப்பட்டமாகப் புளுகியுள்ளார்.
இவர் சொல்வது போல் தவ்ஹீத் ஜமாஅத் சேவா பாரதியைத் தொடர்பு கொள்ளவும் இல்லை. ஒரு காலத்திலும் இந்த மத வெறியர்களைத் தொடர்பு கொள்ளவும் மாட்டார்கள்.
ஐயாயிரம் தண்ணீர் பாக்கெட்டோ ஐந்து பாக்கெட்டோ தவ்ஹீத் ஜமாஅத் காக்கி டவுசர்களிடம் வாங்கவில்லை.
அப்படி வாங்கி இருந்தால் அதற்கான ரசீது, அல்லது தண்ணீர் பாட்டில் வழங்கிய போது எடுத்த வீடியோ அல்லது புகைப்படம் வெளியிட்டு இந்த டவுஸர்கள் நிரூபித்துக் காட்ட வேண்டும்.
இவர் சொன்ன தேதியில் சேவாபாரதியிடம் புரசைவாக்கம் தவ்ஹீத் ஜமாஅத் கிளை நிர்வாகிகளிடம் விசாரித்தோம்.
அவர்கள் சொன்ன விபரம் இதுதான்.
ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் அமைந்துள்ள அழகப்பா சாலையில் உள்ள தனியார் கடையில் நாங்கள் காசு கொடுத்து தண்ணீர் வாங்கினோம். கடையின் பெயர் CK AQUA FARMS
20 லிட்டர் கேன் 40 வாங்கினோம். இதன் விலை 800 ரூபாய்க்ள்.
5.75 ரூபாய் வீதம் அரைலிட்டர் பாட்டில் 500 வாங்கினோம். இதன் மொத்த தொகை 2875 ஆகும்.
ஆக மொத்தம் 3675 ஆகும்.
20 லிட்டர் கேனுக்காக 2000 ரூபாய் டெபாசிட் கொடுத்து விட்டு பின்னர் காலி கேன்களைக் கொடுத்து விட்டு 2000 ரூபாய் டெபாசிட் பணத்தைப் பெற்றுக் கொண்டோம்.
அந்தக் கடையிலிருந்து தண்ணீர் கேன்கள் ஏற்றப்படும் போது ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் அருகில் இருந்து சிலர் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
தவ்ஹீத் ஜமாஅத்தினர் தண்ணீர் பாட்டில்கள் வாங்கிப் போனார்கள் என்ற செய்தியை அறிந்ததும் இந்த சேகர் என்பவர் சேவாபாரதியில் இருந்து கொடுத்தோம் என்று புளுகியுள்ளார்.
மற்றவர்கள் போல் தவ்ஹீத் ஜமாஅத் பேசாமல் இருந்து விடும். நாம் சொன்னது உண்மை என்று ஆகி விடும் என்று கணக்குப் போட்டு இப்படி அப்பட்டமாகப் புளூகியுள்ளார் இந்தப் பொய்யர்.
ஆனால் கடுமையாக சட்ட நடவடிக்கைக்கு தவ்ஹீத் ஜமாஅத் உட்படுத்தும் என்று தெரிகிறது.
கீழே இவனது வீடியோவும், தண்ணீர் வாங்கிய பில்லும் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மதவெறிக்கும்பலுடன் தவ்ஹீத் ஜமாஅத் இணைந்து இணக்கமாக செயலப்டுகிறது என்றும் புளுகியுள்ளார்.
இவர்களுடன் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எந்த ஒட்டும் இணக்கமும் உறவும் இல்லை என்பது உலகத்துக்கே தெரியும்.
ஒரு பணியும் செய்யாமல் நாங்களும் பணி செய்தோம் என்று காட்டி அவமானத்துக்கு மேல் அவமானப்பட்டுக் கொண்டே இருக்கிறது காவிக்கும்பல்.
இதை ஒவ்வொரு இந்து மக்களுக்கும் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வீடியோ

Related Posts: