செவ்வாய், 5 ஜூலை, 2016

நாளை பெருநாளா ? மோடி அரசைப் பின்பற்றும் தலைமை டவுன் காஜி



இன்று மாலை இலங்கை ,ஆஸ்டிரேலியா போன்ற நாடுகளில் பிறை தென்பட்டு நாளை புதன் கிழமை நோன்புப் பெருநாள் என அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தின் நிலை என்ன என இஸ்லாமியர்கள் தமிழகம் முழுவதும் பிறை பார்க்கலானார்கள். இதில் கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்புதூர் எனும் ஊரில் 6 பேர் பிறைபார்த்ததாக சாட்சியம் அளித்த நிலையில் நாளை ரம்ஜான் பெருநாள் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எனும் இஸ்லாமியப் பேரியக்கம் ஒர் அறிவிப்பு வெளியிட்டது.
தமிழக முஸ்லிம்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய இவ்வேலையில் தலைமை டவுன் காஜி , தமிழகத்தில் எங்கும் பிறை தெரியவில்லை என ஒரு குண்டைத் தூக்கிப் போட்டு நாளை நோன்பு பிடிக்க வேண்டுமெனவும் வியாழன் தான் பெருநாள் எனவும் கூறியுள்ளார்.
மோடி அரசை பின்பற்றும் டவுன் காஜி
தமிழகத்தில் பிறை தெரிந்தும் கூட , அதை மறைத்து பேச வேண்டிய நிலைக்குக் காரணம் என்ன ?
அவிழும் மர்மங்கள் இதோ !
 நாளை பெருநாள் இல்லை என மத்திய மாநில அரசு இன்று மதியமே அறிவித்த காரணத்தால் , அதற்கு இசைந்த டவுன்காஜி நபிவழிக்கு மாற்றமான இந்த முடிவை எடுத்துள்ளார்.
இது டவுன்காஜிக்கு புதிதல்ல தமிழகத்தில் பிறை தெரிந்தாலும் தலைமைக் காஜிக்கு மத்திய  , மாநில அரசிடம் ஒப்புதல் வரவேண்டும்.
இதைப்போலத்தான் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் எங்குமே பிறை தெரியாத போது தலைமைக் காஜி தமிழக அரசின் உத்தரவுக்கேற்ப பெருநாளை அறிவித்தார்.
தற்போது மத்திய அரசு நாளைப் பெருநாள் இல்லை எனக் கூறியுள்ளதால் அதற்கு இசைந்து டவுன்காஜி தடுமாறியுள்ளார்.
தமிழக முஸ்லிம்கள் மோடி அரசுக்கு பயப்படாமல் நாளை விமர்சையாக  பெருநாள் கொண்டாடுவார்கள்.

Related Posts: