திங்கள், 25 ஜூலை, 2016

MK Patti - மாதாந்திர சமுதாய பணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டவை தீர்மானங்கள்

இன்று 24-07-2016 அன்று முக்கண்ணாமலைப்பட்டி தவ்ஹித் ஜமாத் மர்கஸில் நடைபெற்ற மாதாந்திர சமுதாய பணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டவை தீர்மானங்கள் 
1. முக்கண்ணாமலைப்பட்டியில் இருந்து காலை 6.10 அரசு நகரப்பேருந்து உள்ளது ( நம் 10 ) அதைவிட்டால் 9.00 மணிவரை எந்ந அரசுப்பேருந்தும் புதுக்கோட்டை இல்லை இதனால் வணிகர்களும் தொழிலாளர்களும் மாணவ மாணவியர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர் இதனை கலையும் பொருட்டு இடைப்பட்ட நேரத்தில் 8.00 ஒரு அரசு பேருந்தை நமது ஊருக்கு பெறுவதும்.அதற்காக போக்குவரத்து ஆனையரை சந்தித்தல்
2. செங்குளம் பஸ் வளைவிடத்தில் அதாவது செங்குளம் ரவுண்டான பகுதியில் ரியாஸ் மளிகை அருகில் பல லட்சம் சிலவில் அமைக்கப்பட்டதாக கூறப்படும் சாக்கடை கால்வாய் மிகவும் தூர்ந்தும் சேதமடைந்தும் சாக்கடைநீர் தூர்வாரமால் விட்டதால் அதன் கழிவுகள் மற்றும் கழிவுநீர் அந்த பகுதி முழுவதும் பெருக்கெடுத்து ஓடுவதால் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளது அதனை சரிசெய்யவும் சமந்தபட்ட அன்னவாசல் ஒன்றிய பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியை சந்தித்து முறையிடுவது
என இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

Related Posts: