மும்பை ஏடிஎம்-மில் பாதி அச்சடிக்கப்பட்ட நிலையில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் வந்ததாக புகார் எழுந்துள்ளது.
ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியாகி 11 நாட்கள் கடந்துவிட்டன. ஆனால், புதிய 500 ரூபாய் நோட்டுகள் வடமாநிலங்களில் ஒருசில இடங்களில் மட்டுமே புழக்கத்துக்கு வந்துள்ளன. அதேநேரம் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் பரவலாகக் கிடைத்து வருகிறது. இதனால் 2,000 ரூபாய் நோட்டுகளுக்கு சரியான சில்லறை கிடைக்காமல் பொதுமக்களும், வியாபாரிகளும் தவித்து வருகின்றனர். இந்தநிலையில், மும்பையில் தனியார் வங்கி ஏடிஎம் ஒன்றில் முழுமையாக அச்சடிக்கப்படாத புதிய 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கப்பெற்றதாக புகார் எழுந்துள்ளது. அந்த ரூபாய் நோட்டுகளில் உள்ள அச்சு மை பாதி அழிந்தநிலையில் இருப்பது போன்ற புகைப்படம் சமூகவலைதங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
November 19, 2016 - 04:57 PM