வியாழன், 24 நவம்பர், 2016

68 ஆண்டுகள் கழித்து முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்பட்ட பள்ளிவாசல்......!!

ஹரியானா மாநிலத்திலுள்ள கோள் கிராமத்தில் பள்ளிவாசல் ஒன்று 68 ஆண்டுகளுக்கு முன்பு சீக்கியர்களால் அபகரிக்கப்பட்டது.
அபகரிக்கப்பட்ட பள்ளிவாசல் சீக்கியர்களின் ஆலயமான குருத்துவாராவாக வழிபாடு செய்யப்பட்டு வந்தது.
அந்த கிராமத்தில் முஸ்லிம்கள் குறைவாக வாழ்கின்றனர். அது முஸ்லிம்களுக்கு சொந்தமான இடம் என்பதற்கான முழு ஆதாரங்களையும் திரட்டி இப்போது உள்ள குருத்துவாரா நிர்வாகிகளிடம் முஸ்லிம்கள் ஒப்படைத்தனர்.
ஆதாரங்களை கண்ட சீக்கியர்கள் இது முஸ்லிம்களுக்கு சொந்தமான ஆலயம் என்பதை உணர்ந்து ஆலயத்தை முஸ்லிம்களிடமே ஒப்படைத்து குருத்துவாராவை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளனர்.
68 ஆண்டுகள் கழித்து அல்லாஹ்வுடைய ஆலயம் முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இப்போது ஐவேளையும் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வருகின்றனர்.
மனிதர்கள் தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல, மனிதர்கள் தவறு செய்யக்கூடியவர்கள். இருப்பினும் தங்களுடைய தவறுகளை உணர்ந்து திருத்திக்கொள்ள வேண்டும்.

Related Posts: