வியாழன், 10 நவம்பர், 2016

சவூதியின் ஆட்சியாளர்களளை ஒரு கை பார்ப்பேன்! அமெரிக்க புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப்

நான் பதவிக்கு வந்ததும், சவூதியின் ஆட்சியாளர்களளை ஒரு கை பார்ப்பேன்!
14915705_855151387961517_8720949214612483119_n
நான் பதவிக்கு வந்ததும், செப்டம்பர் 11 ம் திகதிய பயங்கரவாத தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ள சவூதியின் ஆட்சியாளர்களளை ஒரு கை பார்ப்பேன், இன்று எம்மைப் பொருத்தவரை, சவூதி என்பது, காலாவதியான ஒரு பொருளாதார வளம் ஆகும்.
இன்று உலகில் எண்ணெய் வளம் பற்றிய அதிக ஈடுபாடு அவசியம் அற்ற ஒன்றாகும். உலகம் எண்ணெய் வளத்துக்கு மாற்றீடாக, மாற்று வழி தொழில் நுட்பத்தில் கால் பதித்து வருகிறது. அமெரிக்கா அதில் முதன்மை பெறுகிறது.
சவூதி ஆட்சியாளர்கள், எம்மை தமது எண்ணெய்வணிகத்திதின் முலம், எமது பல கோடி பணத்தை கவ்வுவது மாத்திரமன்றி, எமது தேசத்தை மாற்றீடான ஒரு எரிசக்தித் துறைக்கு ஈடுபாடு காட்ட முடியாதவாறு தள்ளி உள்ளனர். இந்த சவூதி அரசு, எமனுடன் ஒரு நீண்ட எல்லைப் போரில் சிக்கி விட்டது.
இவர்களை காப்பாற்றுவதானால், அவர்கள் அமெரிக்காவுக்கு மிக மிக பெரும் தொகை பணத்தை தரவேண்டும், ஆனால் அதைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால், இறுதியில் அது அமெரிக்காவுக்கு பெருத்த நஷ்டத்தையே தரும். அவ்வகையில், அமெரிக்கா இனிமேல் இந்த காலாவதியான, ஒரு எண்ணெய் சண்டையில் மூக்கை நுழைக்காமல் இருப்பதே விவேகமானது.
எம்மைப் பொருத்தவரை சவூதி என்பது இனிமேல் பெறுமதியற்ற ஒரு தேசமாகும் அது அமெரிக்காவுக்கு அவசியமற்ற தேசம்களின் பட்டியலில், நான் பதவிக்கு வந்ததும் உள்ளடக்குவேன் …… அமெரிக்காவின் புதிய அதிபர் DONALD TRUMP அன்று வழங்கிய செவியின்தமிழாக்கம்

Related Posts: