வியாழன், 24 நவம்பர், 2016

அழிவுப்_பாதையில்_பயணிக்கும்_இந்தியா! கொதிக்கும் மக்கள் ! ஆட்சி மாற்றம் வருமா ?

இந்திய எல்லையில் கடும் பதற்றம். 3 இந்திய வீரர்கள் சாவு! பாவம் 3 வீரர்கள் பலியாகி விட்டார்கள் அல்லது பலியாக்கி விட்டார்கள். இந்திய நாட்டிற்குள் ஏற்படும் பதட்டங்களைப் பொருத்து எல்லைப் பதட்டம் மேலும் அதிகரிக்கப்படலாம் என்று தெரிகின்றது.
அடுத்து ஒரு முக்கியமான விசயம்!
இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்களின் மொத்த மதிப்பு 17 லட்சம் கோடி ரூபாய்கள் ஆகும். இதில் பிரதமர் மோடி அவர்கள் அறிவிப்பின்படி செல்லாமல் போன 500 மற்றும் 1000 ரூபாய்களின் மதிப்பு ரூ 14 லட்சம் கோடிகள் ஆகும். நேற்று வரை வங்கிகளில் டெபாசிட் மற்றும் மாற்றிக் கொண்ட பழைய செல்லாத நோட்டுக்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
வெறும் 1 லட்சத்து 40 ஆயிரம் கோடிகள் மட்டும்தான். இது கிட்டத்தட்ட மொத்த பண மதிப்பில் 10% ஆகும். இதற்கு என்ன காரணம் கருப்பு பணம் ஒழிந்து விட்டதா என்றால் இல்லவே இல்லை.
சரியான முறையில் மாற்றிக் கொடுக்கப்படாதது, தேவையற்ற கட்டுப்பாடுகள் அதுமட்டுமின்றி ரூ இரண்டரை லட்சம் வரை டெப்பாசிட் செய்பவர்களுக்கு எவ்வித வரியும் விதிக்கப்படாது என்று உறுதி கொடுத்த மட்டிஅரசு இப்போது இரண்டு லட்சம் டெபாசிட் செய்தவர்களுக்கும் கூட வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் கைகளில் உள்ள காசுகளை மாற்றிக் கொள்ள இயலாமல் இன்னமும் தவித்துக் கொண்டுள்ளார்கள்.
பல நிறுவனங்களில் ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் பல நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளது. சேலத்தில் இயங்கும் விசைத்தறிகளில் பலர் வேலை இழந்து வீட்டில் முடங்கியுள்ளனர். இந்தியப் பொருளாதாரமே சீர்குலைந்து போயுள்ளது.
இந்த நிலையில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் நாளை 24/11/2016 வரை மட்டுமே செல்லும் என்று யாரோ கிளப்பிய புரளியால் மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
தகுதியற்றவர்களிடம் பொறுப்புகள்
ஒப்படைக்கப்பட்டால் அவர்களின் ஆட்சியில் உள்ள மக்களின் நிலை இப்படித்தான் ஆகும் என்பதற்கு ஆப்கே மோடி சர்க்கார் ஒரு நல்ல உதாரணம்.
Image result for atm queue fight
Credit: kaalaimalar.net