சனி, 26 நவம்பர், 2016

வீடுகளில் தங்கம் வைத்திருக்க வரம்பு?...மத்திய அரசின் அடுத்த திட்டம்?

வீடுகளில் தங்கம் கையிருப்பு வைத்திருப்பதற்கு கட்டுப்பாடு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கட்டுப்பாடுக‌ள் கொண்டு வரப்பட உள்ளதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையில் வருமான வரிச் சட்டம் தொடர்பான சட்டத்திருத்த மசோதாவை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ‌மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் கணக்கில் வராத பணத்திற்கு 60சதவிகித வரி விதிப்பது உள்ளிட்ட அம்சங்கள் இந்த திருத்தத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.