ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் திடீர் அறிவிப்பால் நாடு முழுவதும் தொடர்ந்து குழப்பமான நிலை நீடித்து வருகிறது.
இந்த விவகாரம் தற்போது 3-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களில் தொடர்ந்து பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது.
தர்ணா போராட்டம்
அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத பொதுமக்கள் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். வாசல்களில் தொடர்ந்து காத்திருக்கின்றனர். ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்கு பதிலாக அடிக்கப்பட்டு உள்ள ரூ.500, ரூ.2000 நோட்டுகளும் முழுமையான புழக்கத்துக்கு இன்னும் வராததால் இந்த பிரச்சினை சுமுக நிலையை அடைய இன்னும் சில வாரங்கள் ஆகும் என தெரிகிறது.
இந்த பிரச்சினையை மிகவும் தீவிரமாக எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக ஓரணியில் நின்று போராடி வருகின்றன. குறிப்பாக பாராளுமன்றத்தில் இந்த பிரச்சினையை எழுப்பி வரும் எதிர்க்கட்சிகள், இது குறித்து ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் விவாதிக்கக்கோரி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் குளிர்கால கூட்டத்தொடர் தொடர்ந்து முடங்கி வருகிறது.
இதைப்போல பாராளுமன்றத்துக்கு வெளியேயும் போராட்டங்களை முன்னெடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. முதற்கட்டமாக பாராளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று இந்த தர்ணா போராட்டம் நடந்தது.
ப.சிதம்பரம், கனிமொழி
பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே திரண்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் கைகளை கோர்த்தபடி மனிதச் சங்கிலியாக நின்றனர். சிலர் தரையில் அமர்ந்தும் போராட்டம் நடத்தினர். அப்போது அரசுக்கு எதிரான பல்வேறு கோஷங்கள் அடங்கிய அட்டைகளை அவர்கள் கையில் ஏந்தி இருந்தனர்.
இந்த போராட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, பாராளுமன்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், துணைத்தலைவர் ஆனந்த் சர்மா, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம், ஜனார்த்தன் திவிவேதி, சத்யவர்த் சதுர்வேதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓபிரையன், ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் படேல், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் டி.ராஜா மற்றும் கனிமொழி, திருச்சி சிவா (தி.மு.க.) நவநீதகிருஷ்ணன் (அ.தி.மு.க.) உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த சுமார் 200 எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
ராகுல்காந்தி தாக்கு
நிகழ்ச்சியின் இடையே நிருபர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டது தொடர்பாக பிரதமர் மோடியை கடுமையாக தாக்கினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவித்தது உலகிலேயே மிகப்பெரிய முன்னேற்பாடற்ற நிதி பரிசோதனை ஆகும். இது குறித்து அவர் யாரையும் கேட்கவில்லை. இது நிதி மந்திரியின் முடிவு அல்ல மாறாக பிரதமரின் முடிவு. இது குறித்து நிதி மந்திரிக்கு தெரியாது. தலைமை பொருளாதார ஆலோசகருக்கு தெரியாது.
அறிவிப்பில் ஊழல்
இந்த அறிவிப்புக்கு முன்னால் சில வங்கி கணக்குகளில் வைப்புத்தொகை அதிக அளவுக்கு உயர்ந்துள்ளது. மேற்கு வங்காள பா.ஜனதா கிளை மற்றும் பிற மாநில கிளைகளுக்கு இந்த அறிவிப்பு குறித்து தெரிந்து உள்ளது. இவ்வாறு பா.ஜனதா அமைப்புகளுக்கும், பா.ஜனதாவின் தொழிலதிபர் நண்பர்களுக்கும் இது தெரிந்துள்ளது.
எனவே இந்த முடிவுக்கு பின்னால் ஊழல் நடந்திருப்பதாக நாங்கள் கருதுகிறோம். இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னால் பா.ஜனதா தலைவர்கள் மற்றும் பெரும் தொழிலதிபர்களுக்கு பிரதமர் தகவல் கூறியிருப்பதாக நாங்கள் கருதுகிறோம். எனவே இது குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.
பாராளுமன்றத்துக்கு வரவில்லை
பிரதமர் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார்? என 200 எம்.பி.க்கள் கேட்கிறார்கள். ஆனால் இதற்கு பதில் கூற வேண்டிய பிரதமர் பாராளுமன்றத்துக்கு வருவதில்லை. பாராளுமன்றத்துக்கு வருவதற்கு அவர் ஏன் அஞ்சுகிறார்?
இந்த நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதமர் நிச்சயம் பாராளுமன்றத்துக்கு வரவேண்டும். இந்த பிரச்சினை தொடர்பான ஒட்டுமொத்த விவாதத்திலும் அவர் அமர்ந்து எதிர்க்கட்சி தலைவர்களின் கோரிக்கைகளை கேட்க வேண்டும். பொதுக்கூட்டங்களிலும், இசை கச்சேரிகளிலும் பங்கேற்க நேரம் இருக்கும் அவருக்கு, பாராளுமன்றத்துக்கு வர நேரம் இல்லை.
பொருளாதார குழப்பம்
காங்கிரஸ் மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஊழல் மற்றும் கருப்பு பணத்துக்கு எதிராகவே போராடி வருகின்றன. ஆனால் முன்கூட்டியே திட்டமிடாத இந்த அறிவிப்பு மூலம் சிறப்பாக இருந்த பொருளாதாரத்தை நீங்கள் பாழாக்கி விட்டீர்கள். நாட்டை பொருளாதார குழப்பத்தில் தள்ளிவிட்டீர்கள்.
இந்த அறிவிப்பால் மேற்கு வங்காளம், கேரளா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். விவசாயிகள், தொழிலாளர்களின் நிலையோ மோசமாகி உள்ளது.
வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் கோட்-சூட் போட்டவர்களோ, பா.ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.க்களோ வரிசையில் நிற்கிறார்களா? அவர்களுக்கு பணம் தேவையில்லையா? சாதாரண மக்கள் தான் வங்கிகளில் வரிசையில் நிற்கிறார்கள். அதையே இங்கு நாங்கள் செய்கிறோம்.
ஏழை மக்களின் குரல்
பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில், உயிரிழந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆனால் வங்கிகளில் வரிசையில் நின்று உயிரிழந்தவர்களின் பெயர்கள் அதில் இடம் பெறவில்லை. இவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த நேரமில்லாதது அவமானத்துக்குரியது.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
இந்த போராட்டத்தை தலைமை தாங்கி நடத்துவது யார்? என்ற கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, ஏழை மக்களின் குரலே இதற்கு தலைமை தாங்குவதாகவும், எம்.பி.க்கள் அனைவரும் அதை பிரதிபலிப்பதாகவும் கூறினார்.
மாயாவதி குற்றச்சாட்டு
இந்த தர்ணாவில் கலந்து கொண்ட மாயாவதி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி சம்மன் அனுப்பி, பொதுமக்கள் படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.
இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து நாடு முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து துன்பப்படுவதாக கூறிய அவர், இந்த முடிவை அறிவிப்பதற்கு முன் அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்க தவறிவிட்டது எனவும் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே மத்திய அரசை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதில் ஜெயாபச்சன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.