வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

சூழ்ந்துள்ள ஆபத்தின் முழுப் பரிமாணத்தையும் நாம் புரிந்து கொள்வோம்.

சூழ்ந்துள்ள ஆபத்தின் முழுப் பரிமாணத்தையும் புரிந்துகொள்ள முயல்வோம்..*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
மிகவுக் கவலையோடுதான் இதைப் பகிர்கிறேன். என்னைப் பொருத்த மட்டில் சமூகத்திப் பிளவுபடுத்தும் ஒரு வெறுப்பு அரசியல் தமிழ்ச்சூழலை அழித்துவிடக் கூடாது என்பதே முதல் கரிசனம்.
என்னைப் பொருத்த மட்டில் எனக்கு எந்த அரசியல் கட்சியுடனும் நெருக்கமான உறவு கிடையாது. எந்த அரசியல் தலைவருடனும் கூட எனக்குத் தொடர்பு கிடையாது. நான் ஓரளவு நெருக்கமாகவும் நேசிப்புடனும் இருக்கும் இடதுசாரிக் கட்சிகளாலும் கூட நான் 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டவந்தான்.
இந்தப் பீடிகை எதற்கெனில் நான் சொல்லப்போவதை ஏற்காதவர்களும் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்டு வையுங்கள் என்பதற்காகத்தான்.
இப்போது நடந்து கொண்டிருக்கும் அரசியலை முழுக்க முழுக்க ஆட்டுவிப்பது பா.ஜ.க தான். நேரடியாக இந்துத்துவம் கால் ஊன்ற முடியாத அளவிற்கு ஒரு வலுவான அடித்தளத்தை இட்டுச் சென்ற பெரியார் உள்ளிட்ட தலைவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.
நேரடியாக நுழைய முடியாத இந்துத்துவம் இன்று மேற்கொண்டுள்ள அரசியல்தான் பன்னீர் ஆதரவு. அதற்குத் துணை போகும் வகையில் பா.ஜ.கவுடன் underground ல் இணைந்து வேலை செய்கிறது தி.மு.க.
படிப்படியாக பல்வேறு முனைகளிலிருந்தும் வேலை செய்து தன் விஷ வலையை விரித்துவருகிறது இந்துத்துவம். அப்பட்டமான இந்துத்துவ ஆதரவு சக்திகளாக உள்ள கமலஹாசன், ரஜினி, விஜய் முதலிய திரைப்படத் துறையினர் எல்லோரும் இன்று வெளிப்படையாக பா.ஜ.க பக்கம் நிற்கின்றனர். இன்னொரு பக்கம் தாருண் விஜய் என்கிற ஆர்.எஸ்.எஸ் ஊழியன் மிக இரகசியமாகப் பேணும் அரசியல் உறவுகள் நேரடியான அரசியல் தளத்தில் மிகவும் ஆபத்தானவை.
ஊடகங்களில் அவர்களுக்கு எதிராக இருக்கக்கூடியவர்களும் இன்று சாம தான தண்ட பேத உத்திகளால் உள்ளிழுக்கப் படுகின்றனர். மாறன் பிரதர்ஸ் இன்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளதை அவ்வளவு அப்பாவித்தனமாகப் பார்த்துவிட வேண்டாம். இன்னும் கனிமொழியை மீட்க வேண்டிய தேவையும் தி.மு.க வுக்கு உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
இத்தனை அமளிக்கும் மத்தியில் பா.ஜ.க விசுவாசி கவர்னர் உடனடியாக வராததும், புறப்படும் முன்னரே பன்னீர் புகழ் பாடுவதும் சாதாரண விடயங்கள் அல்ல.
இந்த அச்சம் தரக் கூடிய ஜனநாயக விரோத கவிழ்ப்பு அரசியலை எதிர்ப்பது என்பது சசிகலா ஆதரவு நிலைபாடு அல்ல.
சசிகலா கும்பல் எதிர்காலத்தில் பா.ஜக ஆதரவு நிலைபாடு எடுக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்றால்.. எந்த உத்தரவாதமும் இல்லை என்பதுதான் என்பதில். ஆனால் அந்தக் காரணத்தைச் சொல்லி தமிழகத்தை பா.ஜ.கவின் கவிழ்ப்பு அரசியலுக்கு நாம் தட்டில் வைத்துக் காவு கொடுத்துவிட முடியாது.
மாஃபியா கும்பல்தான் இல்லை என்று சொல்லவில்லை., யார்தான் இங்கு மாஃபியா குமபல இல்லை. மாஃபியா கும்பல் என்கிற பெயரில் ஃபாசிசக் கும்பலுக்கு நாம் பட்டுக் கம்பளம் விரித்துவிட இயலாது.
சூழ்ந்துள்ள ஆபத்தின் முழுப் பரிமாணத்தையும் நாம் புரிந்து கொள்வோம்.
(FB) Marx Anthonisamy