புதன், 1 பிப்ரவரி, 2017

அதிக வருமானம் உள்ளோருக்கு அதிக வரி

தனியார் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை என நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.அவர் தனது பட்ஜெட் உரையில், தனியார் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை என கூறியுள்ளார். 
அதன்படி, ஆண், பெண் இருபாலருக்கும் ஆண்டு வருமானம் இரண்டரை லட்ச ரூபாய் வரை வரி இல்லை. அதேசமயம், ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வருமானம் உள்ளோருக்கு 10% லிருந்து 5%ஆக வரி குறைக்கப்படுவதாக தெரிவித்தார்.
ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையுள்ள வருமானத்திற்கான வரி மீது 10% கூடுதல் வரி விதிக்கப்படும் எனவும் நிதியமைச்சர் கூறியுள்ளார். தனி நபர் வருமான வரி கணக்கு தாக்கல் படிவம் இனி ஒரே பக்கத்தில் இருக்கும் எனவும் அருண் ஜேட்லி குறிப்பிட்டார்.