அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா விரைவில் தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள நிலையில்,
கவர்னர் வித்யாசாகர் ராவ் திடீரென டில்லிக்கு சென்றார்.சென்னையில் நடந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் , சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் கோவை வந்திருந்தார்.
பின்னர், குடும்பத்துடன் ஊட்டியில் இரண்டு நாட்கள் தங்குவதற்கு திட்டமிட்டிருந்தார்.இந்நிலையில், சசிகலா விரைவில் முதல்வராக உள்ள சூழலில், டில்லிக்கு உடனடியாக வருமாறு கவர்னர் வித்யாசாகருக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து தகவல் வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர் கோவையிலிருந்து தனி விமானம் மூலம் இரவு 7.45 மணிக்கு டில்லி செல்கிறார்.
இந்த அவசர பயணம் சசிகலா முதல்வராகுவதற்கு டெல்லி செக் வைத்திருப்பதாகவே கூறப்படுகிறது. இந்த நிலையில் கார்டனில் சசிகலா அதிர்ச்சியில் உள்ளார்.