அம்ரித் லால்
தென்னிந்தியாவில் பதிவு செய்யப்பட்ட சாதிய எதிர்ப்பு போராட்டங்களில் முக்கியமானது தோல் சீலை போராட்டம் ஆகும்.
இந்தப் போராட்டத்தின் 200ஆம் ஆண்டு நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்வர் பினராய் விஜயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டம் கேரளத்தில் மறுமரக்கால் சாமரம் என்றும் தமிழ்நாட்டில் சாணார் கிளர்ச்சி என்றும் தோல் சீலைப் போராட்டம் என்றும் அறியப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஓ.பி.சி பட்டியலில் உள்ள நாடார் சமூகத்தினர் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தினர். அவர்களின் கோரிக்கை, “உயர் சாதி பெண்கள் போன்று தங்கள் சமூக பெண்களும் மார்பை மறைக்க அனுமதிக்கப்பட வேண்டும்” என்பதே.
இந்தக் கோரிக்கையை அரசின் முக்கிய பொறுப்புகள் வகித்த நாயர் சமூகத்தினர் எதிர்த்தனர்.
நாகர்கோவிலில் நடந்த இந்நிகழ்ச்சியில் பேசிய மு.க. ஸ்டாலின், “தோல் சீலைப் போராட்டத்துக்கு பிறகு வைக்கம் சத்தியாகிரகம் நடந்தது என்பதை நினைவு கூர்ந்தார். கேரள முதல்வர் பினராய் விஜயன், வைக்கம் போராட்ட நிகழ்வில் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
வைக்கம் சிவன் கோவில் அருகே வைக்கம் சத்தியாகிரகம் நடந்தது. இதில் சாணார் போராட்டம் அல்லாது உயர் சாதியினரும் கலந்துகொண்டனர். இந்தப் போராட்டம் வைக்கம் முதல் திருவனந்தபுரம் வரை நடத்தப்பட்டது.
சாணார் கிளர்ச்சி என்பது உடை அணிதலில் மட்டும் இருக்கவில்லை. சமூக உரிமைகள் மீதும் கவனம் செலுத்தியது. அந்த 1823 கால கட்டங்களில் கிழக்கிந்திய கம்பெனி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது.
திருவிதாங்கூரை பொறுத்தமட்டில் இந்து ராஜ்ஜியம் என கூறிவந்தது. இந்த ராஜ்ஜியம் பத்மநாப சுவாமிக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 19ஆம் நூற்றாண்டில் இந்த சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. பல ஒடுக்கப்பட்ட சமூகங்கள் ஒன்றிணைந்தன. இதற்கு சாணார் கழகம் முக்கிய வழி வகுத்தது.
கிறிஸ்தவ மிஷனரிகள் வரத் தொடங்கின. அவர்களிடம் ஒரு மாற்றத்தை மக்கள் பார்த்தனர். அதை நோக்கி நகரத் தொடங்கினர்.
மேலும் தோல் சீலைப் போராட்டம் தமிழ்நாட்டில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. அய்யா வைகுண்டர் தீவிர சமத்துவத்தை மையமாக கொண்ட தீவிர ஆன்மிக இயக்கத்தை நிறுவினார். தமிழ் சித்த பாரம்பரியத்தின் தாக்கத்தால், வைகுண்ட சாமிகள் தமிழ், கேரள மதவாதத்துக்கு சவால் விடுத்தார்.
அவர் பிராமணர்கள், மன்னர் மற்றும் மிஷனரிகள் உள்பட பழைய மற்றும் புதிய அனைத்து அதிகார இடங்களையும் கேள்விக்குள்ளாக்கினார். சுதந்திரத்திற்கான அவரது அழைப்பு மனித நடவடிக்கைகளின் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கியது.
அவர் கட்டவிழ்த்துவிட்ட ஆன்மீக ஆற்றல் திருவிதாங்கூரில் உள்ள இந்து சமுதாயத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து வந்த ஸ்ரீ நாராயண குரு (1854-1928) சமூகத்திற்கும் தனி மனிதனுக்கும் உள்ள இயங்கியல், பொருள் மற்றும் ஆன்மீகத் துறைகளை நன்கு அறிந்திருந்தார்.
மேலும் சாணார் கிளர்ச்சிக்கு பிறகுதான் திருவிதாங்கூரில் ஆங்கில கல்வி மற்றும் மேற்கத்திய மருத்துவம் அறிமுகமானது. அரசு சேவைகள் பொதுவுடமை ஆகின. தொடர்ந்து, சாதி, சமூக சீர்திருத்தங்கள் ஏற்பட்டன.
அந்த வகையில், சாணார் கிளர்ச்சி பொதுவுடமையை முன்னிறுத்தியது. வைக்கம் மலையாளிகளை உள்ளடக்கிய அடையாளத்தை உருவாக்கியது.
இரண்டு கிளர்ச்சிகளும் பொது விவகாரங்களில் சாதியின் முதன்மையை நிராகரித்தன.
இந்த வரலாற்றுச் சூழலில்தான் விஜயனுக்கும் ஸ்டாலினுக்கும் இடையிலான நட்புறவு அரசியல் ஒற்றுமை மற்றும் பரம்பரையின் பிரதிபலிப்பாக மாறுகிறது.
அவர்களின் இல்லங்களான திராவிட இயக்கமும், கம்யூனிஸ்ட் கட்சியும் 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளின் சாதி எதிர்ப்பு இயக்கங்களாக இருந்தன.
வைக்கம் சத்தியாகிரகத்தின் தலைவர்களில் ஒருவரான பெரியார் ஈ.வி.ராமசாமி, காங்கிரஸ் தொண்டராக அந்த கோவில் நகருக்கு சென்றார்.
சாதி எதிர்ப்புப் போராளியாகத் திரும்பிய அவர், தமிழ்ப் பகுதியில் அரசியலை தீவிரமாக மாற்றினார். இதற்கிடையில் வைக்கம் போராட்டம் 1931 ஆம் ஆண்டு குருவாயூர் கோவில் நுழைவு இயக்கத்தை தூண்டியது.
அதன் ஒரு பகுதியாக வெளிச்சத்திற்கு வந்த இரண்டு இளம் காங்கிரஸ் தொண்டர்கள் பி கிருஷ்ண பிள்ளை மற்றும் ஏ கே கோபாலன் ஆவார்கள்.
பின்னாள்களில் இருவரும் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன தலைவர்களாக ஆனார்கள்.
source https://tamil.indianexpress.com/opinion/two-anti-caste-revolts-a-shared-inheritance-609704/