13 3 23
நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்றால் தமிழகத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார். மேலும் கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
திருச்சியை சேர்ந்த 27 வயது இளைஞர், கடந்த வெள்ளிக்கிழமை, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம், வாந்தி மற்றும் மயக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். இந்நிலையில் இவரது மரணம் கோவிட் -19 நிமோனியா மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் மரணமடைந்தார் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று சுகாதாரத்துறை தெரிவித்த தகவலின் படி நேற்று மட்டும் 40 பேர் கொரோனாவால் பாதிக்காப்பட்டனர். மேலும் 235 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 35,95,238 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மற்றும் சென்னையில் புதிதாக 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து சேலத்தில் 3 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரியில் 2 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடலூர், தருமபுரி, கன்னியாகுமரி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, திருப்பூர், திருச்சி, வேலூர் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினத்தில் 28 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 35,56,953 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/corona-update-first-death-reporter-corona-virus-610014/