வியாழன், 11 ஜனவரி, 2024

தமிழ்நாட்டில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

 

தமிழ்நாட்டில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

10 1 2024 

தமிழ்நாட்டில் இன்று மட்டும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் லட்சக்கணக்காணோர் உயிரிழந்தனர். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இதனிடையே, இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று மட்டும் 12 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், சென்னையில் மட்டும் 8 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

சேலத்தில் இரண்டு பேருக்கும், செங்கல்பட்டில் ஒருவருக்கும், கிருஷ்ணகிரியில் ஒருவருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது. இன்று 29 பேர் நலம்பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

source https://news7tamil.live/12-new-corona-infections-confirmed-in-tamil-nadu.html

Related Posts: