சென்னைக்கு அருகே புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 1 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்யும் என்றும், தினமும் 2,310 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அருகே சென்னை - திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிளம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் நிலப்பரப்பில் 393.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை (கே.சி.பி.டி) முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்தியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையமாக விளங்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், சென்னை நகருக்குள் இருக்கும் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கோயம்பேடுவில் உள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையத்தின் நெரிசலைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் (எஸ்.இ.டி.சி) சில பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)
சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சி.எம்.டி.ஏ) வெளியிட்டுள்ள பயண ஆலோசனையின்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் (எஸ்.இ.டி.சி) தெற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்கான செயல்பாடுகள் கோயம்பேடுவில் உள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து (சி.எம்.பி.டி) தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (டி.என்.எஸ்.டி.சி), புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகம், மற்றும் ஆம்னி பேருந்துகள் (தனியார் பேருந்து இயக்கம்) ஆகியவை கிளம்பாக்கத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்துக்கு மாற்றப்படும்.
பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) சென்னையின் பல்வேறு நிறுத்தங்களில் இருந்து பேருந்து முனையத்திற்கு பயணிகளின் போக்குவரத்து நெரிசலை எளிதாக்கும் வகையில் தொடர்ந்து பேருந்து சேவைகளை இயக்கும்.
கே.சி.பி.டி-ல் இருந்து சி.எம்.பி.டி-க்கு தாம்பரம் மற்றும் கிண்டி செல்லும் பேருந்துகள், ஒவ்வொரு 3-15 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து என்ற இடைவெளியில் இயக்கப்படும். இரவு 10 மணிக்குப் பிறகு அனைத்து சேவைகளும் 8-15 நிமிடங்கள் இடைவெளியில் பேருந்துகள் இயக்கப்படும். எம்.டி.சி பேருந்துகள் பிராட்வே, திருவான்மியூர், தி நகர், பூந்தமல்லி, ஐயப்பன்தாங்கல் போன்ற பிற வழித்தடங்களுக்கு இயக்கப்பட உள்ளன. 7 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரே நேரத்தில் 60 பேருந்துகள் செல்லும் வகையில் அரசு நிழற்குடை கட்டியுள்ளது.
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு என பிரத்யேக கழிவறைகள் உள்ளன. இங்கு பிரத்யேக டிக்கெட் கவுன்டர்கள், சக்கர நாற்காலி வசதிகள், தொட்டுணரக்கூடிய தரை தளம், பேட்டரியில் இயங்கும் வாகனங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தனி கழிவறைகள் உள்ளன. பாலூட்டும் தாய்மார்கள் பாலூட்டுவதற்கு தனி அறைகள், இலவச மருத்துவ மையம் ஆகியவை உள்ளது.
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தின் தரை தளத்தில் 53 கடைகள் மற்றும் இரண்டு உணவகங்கள், முதல் தளத்தில் 47 கடைகள் மற்றும் இரண்டு உணவகங்கள் உள்ளன. ஏ.டி.எம்.கள், எஸ்கலேட்டர்கள், லிஃப்ட் மற்றும் குடிநீர் வசதிகளும் உள்ளன. இந்த பேருந்து முனையத்தில், 100 ஆண்கள், 40 பெண்கள் மற்றும் 340 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தங்குவதற்கு தங்குமிடங்கள் உள்ளன.
பார்க்கிங் பகுதியில் 2,769 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 324 இலகுரக வாகனங்கள் நிறுத்த முடியும். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் சுவர்கள் நவீன கலை, நிலம் மற்றும் மக்களின் பாரம்பரியத்தை சித்தரிக்கும் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
அரசு 100 படுக்கைகள் கொண்ட ஆண்களுக்கான தங்குமிடத்தையும், 40 பெண் பயணிகளுக்கான தங்கும் இடத்தையும், 340 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கான தங்குமிடத்தையும் கட்டியுள்ளது. (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)
பேருந்து சேவைகள் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க சாலைகளை விரிவுபடுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. புறநகர் ரயில் நிலையம், ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தை இணைக்கும் ஸ்கைவாக் பாலம் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 16 ஏக்கர் நிலப்பரப்பில் தொல்லியல் விளக்க மையம் மற்றும் காலநிலை பூங்கா அமைக்கவும் அரசு செயல்பட்டு வருகிறது.
ரயில் நிலையத்தையும் பேருந்து நிலையத்தையும் இணைக்கும் ஸ்கைவாக் பாலம் கட்டுவதற்கான பணிகள் மற்றும் புறநகர் ரயில் நிலையம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
16 ஏக்கர் நிலப்பரப்பில் தொல்லியல் விளக்க மையம் மற்றும் காலநிலை பூங்கா அமைக்கவும் அரசு செயல்பட்டு வருகிறது.
எஸ்.இ.டி.சி மற்றும் எம்.டி.சி சேவைகள் பேருந்து முனையத்திலிருந்து முழுமையாக செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் ஆம்னி பேருந்துகளின் சேவைகள் பொங்கலுக்குப் பிறகு ஜனவரி மூன்றாவது வாரத்தில் முழுமையாகத் தொடங்கும்.
ஒரு சிலர் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குச் சென்ற நிலையில், அவர்கள் செல்லும் இடங்களுக்குச் செல்வதற்காக கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை அடைவதற்கு திருப்பி விடப்பட்டதால், பயணிகளிடையே குழப்பம் ஏற்பட்டது.
பேருந்து வழித்தடங்கள் மற்றும் நேரங்கள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு ‘சென்னை பஸ்’ செயலியைப் பயன்படுத்துமாறு அதிகாரிகள் பயணிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் இந்த பேருந்து முனையத்தின் பணிகள் தொடங்கப்பட்டாலும், ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பணிகள் வேகமெடுத்தன. சி.எம்.டி.ஏ அமைச்சர் பி.கே. சேகர் பாபு கூறுகையில், முந்தைய அரசு 26 மாதங்களில் 30 சதவீத பணிகளை மட்டுமே முடித்துள்ளது. தற்போதைய அரசாங்கம் எஞ்சிய பணிகளை வெறும் 28 மாதங்களில் செய்து முடித்துள்ளது என்று கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-kilambakkam-bus-terminus-know-all-about-facilities-and-traffic-woes-2060451