செவ்வாய், 9 ஜனவரி, 2024

பில்கீஸ் பானு வழக்கு – கடந்த வந்த பாதை!

 

பில்கீஸ் பானு வழக்கு கடந்த வந்த பாதை குறித்து விரிவாக இந்த தொகுப்பில் காணலாம்.

2002 குஜராத் கலவரத்தின்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு,  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.  3 வயது குழந்தை உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர்.  இந்த வழக்கின் குற்றவாளிகளான 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை ஆகஸ்ட் 15, 2022 அன்று குஜராத் பாஜக அரசு விடுவித்தது.

குற்றவாளிகள் முன் கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கீஸ் பானு உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் குற்றவாளிகளை விடுவித்த குஜராத் அரசின் முடிவை ரத்து உத்தரவிட்டுள்ளது. பில்கீஸ் பானு வழக்கு கடந்து வந்த பாதையை விரிவாக காணலாம்.

பில்கீஸ் பானு வழக்கு கடந்து வந்த பாதை : 

  • 03-03-2002 : குஜராத்தில் கலவரம் வெடித்த போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு,  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.  3 வயது குழந்தை உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர்.
  • 04-03-2002 : தாஹோத் மாவட்டத்தில் உள்ள லிங்ஹெடா காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.  பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளின் பெயர் FIR ல் இடம்பெற்றது.
  • 25-03-2002 : லிம்கேடா மாவட்ட நீதிபதி முன் வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது ; லிம்கேடா மாவட்ட நீதிபதி ஒருமித்த கருத்தை காரணம் காட்டி வழக்கை  முடித்து வைத்தார். 
  • ஏப்ரல் 2003: பில்கீஸ் பானு தேசிய மனித உரிமை ஆணையத்தை அணுகினார்.  தேசிய மனித உரிமை ஆணையம் முன்னாள் அரசு வழக்கறிஞரான ஹரிஷ் சால்வேவை உச்சநீதிமன்றத்தில் பில்கீஸ் பானுவுக்கு ஆதரவாக வழக்கு தொடர  கோரியது.
  • ஏப்ரல் 2003: லிம்கேடா மாவட்ட நீதிபதியின் அறிக்கை மற்றும் குஜராத் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான சிபிஐ விசாரணை,  இழப்பீடு ஆகியவற்றை ரத்து செய்யக் கோரி பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
  • 25-10-2003: மாநில அரசின் சார்பான CID விசாரணையை நிறுத்துமாறு குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
  • 18-12-2003: உச்சநீதிமன்றம் வழக்கை சிபிஐயிடம்  ஒப்படைத்தது.
  • ஜனவரி 2004: குற்றம் சாட்டப்பட்ட 12 பேரை சிபிஐ கைது செய்தது.
  • பிப்ரவரி 11, 2004:  கலவரத்தில் குஜராத் காவல்துறை உடந்தையாக இருந்ததாகக் கூறி இடைக்கால அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது 
  • ஏப்ரல் 9, 2004 :  6 போலீஸ் அதிகாரிகள் மற்றும் 2 அரசு மருத்துவர்கள் உட்பட 20 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
  • மே 12, 2004: குஜராத் காவல்துறையினரின் அத்துமீறல் மற்றும் உடந்தையைக் குறிப்பிட்டு சிபிஐ இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது.
  • ஜூலை 2004: வழக்கை குஜராத்திற்கு வெளி மாநிலத்திற்கு மாற்ற பில்கீஸ் மனு தாக்கல் செய்தார்
  • ஆகஸ்ட் 2004: பில்கீஸ் பானு வழக்கு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
  • ஜனவரி 13, 2005: குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன
  • பிப்ரவரி 20, 2005: பில்கிஸ் பானு வழக்கில்  12 குற்றவாளிகளை அடையாளம் காணப்பட்டனர்.  முதலில் அகமதாபாத்தில் இருந்து விசாரணை தொடங்கியது.
  • ஜனவரி 21, 2008: பில்கீஸ் பானுவை பாலியல் வன்கொடுமை செய்து அவரது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரைக் கொலை செய்ததற்காக 11 பேரை குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் கண்டறிந்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.  போலீசார் மற்றும் மருத்துவர்கள் உட்பட 7 பேரை விடுதலை செய்தது.
  • மே 4, 2017: தங்கள் கடமைகளை சரிவர செய்யவில்லை மற்றும் சாட்சியங்களை அழித்தனர் என்கிற  குற்றச்சாட்டின் கீழ் 5 போலீசார் மற்றும் 2 மருத்துவர்கள் உட்பட 7 பேரை குற்றவாளிகள் என உயர்நீதிமன்றம் அறிவித்தது. 
  • ஜூலை 10, 2017:  தண்டனைக்கு எதிராக இரண்டு மருத்துவர்கள் மற்றும் 4 காவல் துறையினரின் மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது
  • ஏப்ரல் 2019: பாதிக்கப்பட்ட பில்கீஸ் பானுவுக்கு ரூ.50 லட்சம்,  அரசு வேலை மற்றும் தங்குமிடம் உள்ளிட்டவற்றை வழங்க குஜராத் அரசுக்கு  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
  • மே 15, 2022: 15 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த கைதிகளில் ஒருவர், முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
  • ஆகஸ்ட் 2022: பில்கீஸ் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 11பேரை கோத்ரா சிறையில் குஜராத் அரசு முன்விடுதலை செய்தது.
  • ஆகஸ்ட் 15, 2022  : அன்று விடுதலையான பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் 11 பேரை அவர்களது உறவினர்கள் மாலை அணிவித்து வரவேற்பு
  • ஏப்ரல் 2023 : பில்கிஸ் பானு உட்பட பல சமூக ஆர்வலர்கள் 11குற்றவாளிகளின் முன் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு
  • ஜனவரி,  08 – 2024 : பில்கீஸ் பானு வழக்கில் குற்றவாளிகளுக்கு நிவாரணங்களை வழங்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை.  பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் என்பது மிகவும் முக்கியம்,  குற்றவாளிகளை விடுவித்த குஜராத் அரசின் முடிவை ரத்து செய்யப்படுகிறது என  உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பு

source https://news7tamil.live/2002-2024-pilkhiz-banu-case-the-path-taken.html

Related Posts: