சனி, 16 மார்ச், 2024

தேர்தல் பத்திரங்கள்: முக்கிய கட்சிகள் பெற்ற நன்கொடை தொகை எவ்வளவு பாருங்க!

 

இந்தியாவில் அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் முக்கிய கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு நன்கொடை பெற்றிருக்கின்றன என்ற விவரம் வெளியாகி உள்ளது.

தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு  தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்த விவரங்களை உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி,  தேசிய அளவில் எந்த கட்சி அதிக நன்கொடைகளைப் பெற்றுள்ளது மற்றும் முக்கிய கட்சிகள் எவ்வளவு நன்கொடை பெற்றுள்ளன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி, மத்தியில் ஆளும் பா.ஜ.க தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகபட்சமாக 6 ஆயிரத்து 61 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெற்றுள்ளது. இதற்கு அடுத்து, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆயிரத்து 610 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெற்றுள்ளது. இதற்கு அடுத்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஆயிரத்து 422 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெற்றுள்ளது.

பி.ஆர்.எஸ் கட்சி ஆயிரத்து 215 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாகப் பெற்றுள்ளது.

பிஜு ஜனதா தளம் கட்சி 776 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாகப் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க தேர்தல் பத்திரங்கள் மூலம் 639 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெற்றுள்ளது.

இதற்கு அடுத்து, ஆந்திரப் பிரதேசத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் 337 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெற்றுள்ளது. அடுத்து தெலுங்கு தேசம் கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் 218 கோடி ரூபாய்  நன்கொடையாகப் பெற்றுள்ளது.

சிவசேனா கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் 159 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெற்றுள்ளது. 

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் 73 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெற்றுள்ளது.

source https://tamil.indianexpress.com/india/bjp-congress-tmc-dmk-brs-bjd-key-parties-received-donations-amounts-how-much-in-electoral-bonds-4354524