ஞாயிறு, 29 மார்ச், 2020

கொரோனா அச்சுறுத்தல்...மேற்குவங்க இளைஞர்களின் வித்தியாச முயற்சி! March 29, 2020

சென்னையில் இருந்து மேற்கு வங்கம் திரும்பிய தொழிலாளர்கள் தனி அறை இல்லாததால் மரங்களில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். 
மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் உள்ள வாங்கிடி பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் சென்னையில் பணியாற்றி வந்தனர். 21 நாள் ஊரடங்கு காரணமாக அவர்கள் தற்போது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கிராம நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டது. 
photo
ஆனால்  தங்களுடைய வீடுகளில் தனி அறை இல்லாத காரணத்தினால் கிராமத்தில் உள்ள மரங்களில் தொட்டில் கட்டி தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர். 14 நாட்கள் இப்படி மரத்திலேயே தங்கள் பொழுதைக் கழிக்க இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 
மரங்களில் தொட்டில் கட்டி தங்கியிருப்பது அந்த கிராம மக்களுக்கு ஒன்றும் புதிதில்லை. யானைகள் நடமாட்டம் உள்ள அந்தப் பகுதிகளில் யானைகள் ஊருக்குள் வரும் போதெல்லாம் இதுபோல் மரங்களில் ஏறி தங்கள் உயிரை காத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 
credit ns7.tv

Related Posts: