உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரசால், முன்னெப்போதும் இல்லாத இக்கட்டான சூழலை இந்தியா எதிர்கொண்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, இத்தாலி என உலக நாடுகள் பலவும் பலத்த பாதிப்பை சந்தித்துள்ளன.
உலகம் முழுவதும் இந்த வைரஸுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்த நிலையில், கொரோனா குடும்பத்தைச் சார்ந்த கோவிட் 19 வைரஸின் புகைப்படங்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழ் வெளியிட்டுள்ளது.
சீனாவின் வுஹான் நகரிலிருந்து, கடந்த ஜனவரியில் இந்தியா திரும்பிய கேரள மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்தான், நாட்டிலேயே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட முதல் நபா். இவரிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளிலிருந்து, அதிநவீன மின்னணு நுண்ணோக்கி மூலம் எடுக்கப்பட்ட கொரோனா வைரசின் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
புனேவில் செயல்படும் தேசிய வைராலஜி ஆய்வு மையத்தைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்களால் எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படங்களை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளன.இந்த வைரஸானது, கடந்த 2012-ம் ஆண்டில் பரவிய 'மொ்ஸ்-சிஓவி' வைரஸ், கடந்த 2002-ல் பரவிய 'சாா்ஸ்-சிஓவி' வைரஸ் ஆகியவற்றின் தோற்றத்தை ஒத்திருப்பதாக தேசிய வைராலஜி ஆய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.