2019ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சி.ஏ.ஏ வழிமுறைகள் நேற்று வெளியானது. டிசம்பர் 31, 2014ம் ஆண்டுக்கு முன்பாக இந்தியாவில் நுழைந்த இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயினர்கள், பார்சிகள் மற்றும் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த கிறிஸ்துவர்கள் உள்ளிட்டோர் உரிய பாஸ்போர்ட் மற்றும் விசாவை ஒப்படைக்காமல், இந்திய குடியுரிமை வேண்டி விண்ணப்பிக்கலாம்.
சி.ஏ.ஏ சட்டத்தின்படி, இந்தியாவில் உள்ள ஒருவரின் பெற்றோர்கள், அவர்களின் தாத்தா- பாட்டி, அல்லது அவர்களுக்கு முந்தையை சந்ததியினர் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வந்திருந்தால், சமந்தபட்ட நபர் அவர் இந்தியர் என்பதை நிரூபிக்க வேண்டும். இவர்கள் விசாவை சமர்பிக்க வேண்டும் என்பதில்லை, அதற்கு பதிலாக உள்ளூரில் உள்ள அரசு அதிகாரி சான்றிதழ் வழங்கினாலே இவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.
இந்நிலையில் இந்த அறிவுப்பு, குறிப்பாக இந்த நாடுகளில் இருந்து வந்த இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு உதவியாக இருக்கிறது. இவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் இந்த சட்டம் இவர்களுக்கு குடியுரிமை கிடைக்க உதவியாக இருப்பதாக கூறப்படுகிறது.
எதிர்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் இந்த சட்டம் அமல்படுத்தபோவதில்லை என்று அம்மாநில அரசு நேற்று தெரிவித்துள்ளது. சி.ஏ.ஏ சட்டத்தின்படி, குறிப்பிட்ட 3 நாடுகளில் இருந்து வருபவர்கள் , அவர்களின் மதத்தால் துன்புறுத்தலை சந்தித்துள்ளதாக கருதப்படுகிறது. இதனால் டிசம்பர் 31, 2014ம் ஆண்டுக்கு முன்பாக இந்தியாவிற்கு சட்டபூர்வமாகவோ அல்லது சட்டத்திற்கு புரம்பாகவோ வந்திருந்தால் அவர்கள் இந்திய குடியுரிமையை பெற அனுமதி உள்ளவர்கள். மேலும் இந்திய குடியுரிமை வழங்கப்படும் காலம் 11 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகலாக குறைந்துள்ளது.
தேவைப்படும் ஆவணங்களில் உள்ள மாற்றங்கள்
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த நபர்கள், பாஸ்போர்ட் காண்பிக்க தேவையில்லை. பிறப்பு சான்றிதழ், படித்த கல்வியின் சான்றிதழுக்கு பதிலாக லைசன்ஸ் அல்லது நம்மை இவர்கள்தான் என்று உறுதி செய்யும் ஆவணங்களை வைத்துகொள்ள வேண்டும்.
வெளிநாட்டில் உள்ள பாஸ்போர்ட் , பணியாற்றும் இடத்தில் குடியிருப்பு அனுமதிச்சீட்டின் பிரதி ( residential permit). ரூ. 1.500 கொடுத்து வங்கியின் செல்லானை பெற்று கொள்ள வேண்டும். நம்மை பற்றிய விவரம் மற்றும் ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் நமது குணங்களை பற்றி நல்லவிதமாக பேசும் 2 இந்தியர்களின் வாக்குமூலம் தேவைப்படும். இரண்டு வெவ்வேறு தேதிகள் கொண்ட பத்திரிக்கை செய்தியில், குடியுரிமை ;பெற ஏன் விரும்புவதான காரணத்தை சொல்ல வேண்டும்.
இதுபோல ஆதார் கார்டு, பான் கார்டு, பிறப்பு சான்றிதழ், ரேஷன் அட்டை, இன்சுரன்ஸ் பாலிசி, இ.பி.எப் ஆவணங்கள், தபால் நிலையத்தில் இருக்கும் அக்கவுண்ட், திருமண சான்றிதழ், டி.சி என்று அழைக்கப்படும் பள்ளியை விட்டு செல்லும் போது நம்மிடம் கொடுக்கப்படும் ஆவணம் . உள்ளிட்டவற்றை நாம் குடியுரிமை பெறும்போது ஆவணங்களாக காண்பிக்கலாம்.
source https://tamil.indianexpress.com/india/no-passport-no-visa-rules-eased-for-seeking-citizenship-under-caa-4326906