இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி: 8 இடங்களில் வெற்றி
இந்தியாவில் உள்ள ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 10-ஆம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் இந்தியா கூட்டணி 8 இடங்களிலும், பா.ஜ.க 2 இடத்திலும், ஒரு இடத்தில் சுயேச்சையும் முன்னணியில் உள்ளனர்.
தேர்தல் நடந்த இடங்கள்
எம்.எல்.ஏ.க்களின் மரணம் மற்றும் ராஜினாமா உள்ளிட்ட காரணங்களின் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடந்தது.
அந்த இடங்கள், பீகாரின் ருபாலி, மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச், ரணகாட் தக்சின், பாக்தா மற்றும் மணிக்தலா, தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, மத்திய பிரதேசத்தில் அமர்வாரா; உத்தரகாண்டில் பத்ரிநாத் மற்றும் மங்களூர், பஞ்சாபில் ஜலந்தர் மேற்கு; மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர் மற்றும் நலகர் ஆகும்.
தேர்தல் முடிவுகள்
திரிணாமுல் காங்கிரஸ் ராய்கஞ்ச், ரணகட் தக்ஷின் மற்றும் பாக்தா சட்டமன்றத் தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. மணிக்கட்டாலா தொகுதியில் வேட்பாளர் சுப்தி பாண்டே 41,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
தமிழ்நாட்டின் விக்கிரவாண்டியில் திமுக வெற்றி பெற்றுள்ளது. மங்களூர் சட்டமன்றத் தொகுதிக்கு 10 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் காசி முகமது நிஜாமுதீன் பாஜகவின் கர்தார் சிங் தானாவை எதிர்த்து 400 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பத்ரிநாத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் லக்பத் சிங் புடோலா பாஜகவின் ராஜேந்திர சிங் பண்டாரியை எதிர்த்து 5000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
இந்நிலையில் மொத்தமுள்ள 13 தொகுதிகளில் இண்டியா கூட்டணி 8 தொகுதிகளிலும் பா.ஜ.க 2 தொகுதிகளிலும் முன்னணியில் உளளன. ஒரு சில இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் முன்னணியில் உள்ளனர்.
source https://tamil.indianexpress.com/india/by-election-result-2024-india-bloc-wins-8-seats-nda-2-6132202