வியாழன், 11 ஜூலை, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 82.48% வாக்குகள் பதிவு; ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

 

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 82.48% வாக்குகள் பதிவு; ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை 10 07 2024 

விக்கிரவாண்டி தி.மு.க சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல்  மாதம் 6ம் தேதி மரண மடைந்தார். இந்நிலையில் இடைத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து தேதிகளை அறிவித்தது.

தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். அ.தி.மு.க தேர்தலில் போட்டியிட வில்லை. இவர்களையும் சேர்த்து சுயேச்சையாக 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் உள்ளனர்.  வாக்குப்பதிவுக்கு தலா ஒரு வாக்குச்சாவடிக்கும் 2 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தொகுதி முழுவதும் 552 வாகுப்பதிவு எந்திரங்கள், 276 கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளன. தேர்தல் பணியில் 1,355 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 


source https://tamil.indianexpress.com/tamilnadu/vikravandi-by-election-2024-polling-live-updates-voters-percentage-5556058