தமிழ்நாடு பொறியியல் கவுன்சலிங் செயல்முறை விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்த ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண்கள் கூடுமா? குறையுமா? என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தொடர்ந்து கவுன்சலிங் அட்டவணையும் வெளியிடப்பட்டது. மொத்தம் 1,97,601 பேர் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 20,757 அதிகமாகும்.
இந்தநிலையில், பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும் என்பதை கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் சேனலில் விளக்கியுள்ளார்.
இந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண்கள் சற்று அதிகரித்துள்ளது. 0.5 முதல் 22.5 வரை கட் ஆஃப் அதிகரித்துள்ளது. 65 பேர் 200க்கு 200 எடுத்துள்ளனர். 386 பேர் 199-200 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்து உள்ளனர். 869 பேர் 198-199 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ளனர். 1476 பேர் 197-198 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ளனர். 2104 பேர் 196-197 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ளனர். 2862 பேர் 195-196 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ளனர். 3758 பேர் 194-195 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ளனர். 4756 பேர் 193-194 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ளனர். 5939 பேர் 192-193 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ளனர். 7240 பேர் 191-192 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ளனர். 8813 பேர் 190-191 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ளனர்.
199 கட் ஆஃப் எடுத்தவர்களுக்கு 0.5 கட் ஆஃப் குறையும். 195 கட் ஆஃப் வரை 0.5 கட் ஆஃப் குறையும். 194 கட் ஆஃப் எடுத்தவர்களுக்கு 0.5 கட் ஆஃப் அதிகரிக்கும். இதேபோல் 192 கட் ஆஃப் வரை 0.5 கட் ஆஃப் அதிகரிக்கும். 191 முதல் 189 வரை ஒரு கட் ஆஃப் அதிகரிக்கும். 188 எடுத்தவர்களுக்கு 1.5 கட் ஆஃப் அதிகரிக்கும். 187 கட் ஆஃப் எடுத்தவர்களுக்கு 2 கட் ஆஃப் அதிகரிக்கும். 186 கட் ஆஃப் எடுத்தவர்களுக்கு 2.5 கட் ஆஃப் அதிகரிக்கும். 182 வரை 2.5 கட் ஆஃப் அதிகரிக்கும். 181 முதல் 179 வரை 3 கட் ஆஃப் அதிகரிக்கும். 178 கட் ஆஃப் எடுத்தவர்களுக்கு 3.5 கட் ஆஃப் அதிகரிக்கும். 177 முதல் 176 வரை 4 கட் ஆஃப் அதிகரிக்கும். 175 முதல் 174 வரை 4.5 கட் ஆஃப் அதிகரிக்கும்.
173 முதல் 171 வரை 5 கட் ஆஃப் அதிகரிக்கும். 170 முதல் 168 வரை 5.5 கட் ஆஃப் அதிகரிக்கும். 167 முதல் 165 வரை 6 கட் ஆஃப் அதிகரிக்கும். 160 வரை 6.5 கட் ஆஃப் அதிகரிக்கும். 155 வரை 7 கட் ஆஃப் அதிகரிக்கும். 150 முதல் 120 வரை 7.5 கட் ஆஃப் அதிகரிக்கும். 115 வரை 8 கட் ஆஃப் அதிகரிக்கும். 110 வரை 9 கட் ஆஃப் அதிகரிக்கும். 105 வரை 10 கட் ஆஃப் அதிகரிக்கும். 100 வரை 12 கட் ஆஃப் அதிகரிக்கும். 95 வரை 14.5 கட் ஆஃப் அதிகரிக்கும். 90 வரை 17.5 கட் ஆஃப் அதிகரிக்கும். 84 வரை 22.5 கட் ஆஃப் அதிகரிக்கும்.
source https://tamil.indianexpress.com/education-jobs/tnea-2024-engineering-counselling-cut-off-increased-in-anna-university-5708217