வெள்ளி, 13 செப்டம்பர், 2024

40% அமேசான் மழைக்காடுகள் பாதுகாக்கப்பட வில்லை: காலநிலை மாற்றத்திற்கு இது ஏன் முக்கியம்?

 12/09/2024

amaz rain

புவி வெப்பமடைதலை எதிர்த்துப் போராடுவதற்கு அமேசான் மழைக்காடுகளைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர், ஆனால் புதன்கிழமை வெளியிடப்பட்ட புதிய ஆய்வில், உலகின் காலநிலைக்கு இன்றியமையாத காடுகளின் பெரும் பகுதிகள் பாதுகாப்பற்றதாக இருப்பதைக் குறிக்கிறது.

அமேசான் மழைக்காடுகளின் கிட்டத்தட்ட 40% காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் முக்கியமான பகுதிகளாக உள்ளன. இருப்பினும் இந்த காடுகள் பாதுகாக்கப்படாமல் இருப்பதை ஆய்வு குறிக்கிறது. 

பெருவில் உள்ள அமேசான் காடுகளின் தென்மேற்கிலும், பிரேசில், பிரெஞ்சு கயானா மற்றும் சுரினாமில் வடகிழக்கு பகுதியிலும் அமைந்துள்ள பகுதிகள் பாதுகாக்கப்படாதவையாக உள்ளன என தரவு காட்டுகிறது.

அமேசானின் இந்த பகுதிகளில் மிகப்பெரிய, அடர்த்தியான மரங்கள் மற்றும் மிகவும் தொடர்ச்சியான மரங்கள் உள்ளது என்று அமேசான் கன்சர்வேஷனின் ஆண்டியன் அமேசான் திட்டத்தின் (MAAP) கண்காணிப்பை வழிநடத்தும் மாட் ஃபைனர் கூறினார். 

அதாவது, இந்தப் பகுதிகள் அதிக கார்பனைக் கொண்டுள்ளன. அதாவது இந்த பகுதிகளில் தீ விபத்து அல்லது மரம் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டால் இந்த வாயு வெளியேறி வளிமண்டலத்தில் கலக்கப்படும். காலநிலை வெப்பமயமாதல் பசுமை இல்ல வாயுவாக வளிமண்டலத்தில் வெளியேறும். 

செயற்கைக்கோள் தரவு கூறுவது என்ன?

அமேசான் கன்சர்வேஷன் செயற்கைக்கோள் இமேஜிங் நிறுவனமான பிளானட்டின் புதிய தரவை பகுப்பாய்வு செய்தது, இது லேசர்களைப் பயன்படுத்தி காடுகளின் முப்பரிமாண படத்தைப் பெறுகிறது மற்றும் அதை இயந்திர கற்றல் மாதிரிகளுடன் இணைக்கிறது.

MAAP-ன் பகுப்பாய்வு, அமேசானில் உள்ள 61% உச்ச கார்பன் பகுதிகள் உள்நாட்டு இருப்புக்கள் அல்லது பிற பாதுகாக்கப்பட்ட நிலங்களாகப் பாதுகாக்கப்படுகின்றன, ஆனால் மீதமுள்ளவை பொதுவாக அதிகாரப்பூர்வமாக பாதுகாக்கப்படவில்லை  என்பதைக் காட்டுகிறது.

ஆங்கிலத்தில் படிக்க:  40% Amazon rainforest unprotected: why is this significant for climate change?

பிரேசில், சுரினாம் மற்றும் பிரஞ்சு கயானாவில், 51% உச்ச கார்பன் பகுதிகள் மட்டுமே பாதுகாப்பு  மண்டலங்களாகப் பெயரிடப்பட்டுள்ளன. பெரு அதன் முக்கியமான பகுதிகளின் அதிக விகிதத்தை பாதுகாக்கிறது, ஆனால் பாதுகாக்கப்படாமல் விடப்பட்ட சில பகுதிகள் மரம் வெட்டுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

அமேசான் ஏன் முக்கியமானது?

அமேசானில் 71.5 பில்லியன் டன் கார்பன் உள்ளதாக கடந்த மாதம்  MAAP ஒரு ஆய்வு முடிவுகளை வெளியிட்டது, இது 2022 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை விட இருமடங்காகும்.

இந்த ஆய்வில், 2022 வரையிலான பத்தாண்டுகளில் வெளியிடப்பட்ட கார்பனை விட அமேசான் அரிதாகவே உறிஞ்சியதாகக் காட்டுகிறது. இது உலக காலநிலை மாற்றத்திற்கான சமிக்ஞை ஆகும். அமேசான் கார்பை பெறுவதற்குப் பதிலாக கார்பை வெளியேற்றினால் அது கிரகத்திற்குப் பேரழிவை தரும் என  விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


source https://tamil.indianexpress.com/explained/40-amazon-rainforest-unprotected-significant-for-climate-change-why-7063811