ஞாயிறு, 10 நவம்பர், 2024

23 தமிழக மீனவர்கள் கைது… தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்!

 

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சென்ற கன்னியாகுமரி மீனவர்கள், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மூன்று விசைப்படகுகளையும், அதிலிருந்த 23 மீனவர்களையும் சிறை பிடித்து சென்றுள்ளனர்.

அதிகாலையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள், காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும், தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படும் சம்பவம் மீனவர்களை கொதிப்படைய செய்துள்ளது.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவு அமைச்சகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். சில நேரங்களில் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு, ஆயுதங்களை கொண்டு தாக்குதல், வலைகள் மற்றும் படகுகளை சேதப்படுத்துதல் போன்ற சம்பவங்களிலும் இலங்கை கடற்படையினர் ஈடுபடுகின்றனர்.


source https://news7tamil.live/23-fishermen-arrested-sri-lankan-navys-atrocities-continue.html

Related Posts:

  • விபச்சார ஊடகங்களால் திட்டமிட்டு மறைக்கப்படும் உண்மைகல் BJP மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட்டம் இல்லாததால் 30 வினாடிகளில் தனது பரப்புரையை முடித்திருப்பது, பாஜக தொண்டர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள… Read More
  • ஆண் உறுப்பை மேசை மேல் வைத்து அடிக்கிறார்கள்! புங்குடுதீவு மாணவியை கொடூரமான முறையில் படுகொலை செய்தமைக்கும் எனக்கும் தொடர்பு இருக்கின்றது என நீத… Read More
  • தேர்வு முடிவு மாணவ-மாணவிகள், தங்களது பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டினைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை,www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.d… Read More
  • இந்த 27 பைசா கு விலை போகாதீர்கள் 1 மாதம் - 30 நாள் 1 வருடம் - 365 நாள் 5 வருடம்- 1825 நாள் 1 ஓட்டு - 500 ரூபாய் 500÷1825= 0.2740 பைசா இந்த 27 பைசா கு விலை போகாதீர்கள் … Read More
  • தாயத்து கயிறு ஹரம் ஷரீப்(மதீனாவில்)நடந்தஒரு அழகான தஃவா..(கழுத்தில்) தாயத்து கயிறு கட்டி வந்த ஒரு மனிதருக்கு, அதிகாரி ஒருவர் தாயத்து கட்டினால் இறைவனுக்… Read More