எலும்புகளை வலுப்படுத்தும் உணவுகள் இதுதான்!
கால்சியம் என்பது வலுவான எலும்புகளை பெற ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும், யாரெல்லாம் சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். கால்சியம் என்பது வெறும் பாலில் மட்டும் இல்லை. வேறு என்ன உணவுகளில் இருக்கிறது என்பதையும் பார்போம்.
சாதாரண மக்களுக்கு 1000 மிகி கால்சியம் ஒரு நாளைக்கு தேவை. அதுவும் பால் கொடுக்கும் தாய் மார்கள் அல்லது கர்பமாக இருப்பவர்கள் 1500 முதல் 2000 மிகி கால்சியம் உட்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு 600 முதல் 800 மிகி கால்சியம் தேவை என்கிறார் மருத்துவர்.
100 மிலி பாலில் வெறும் 120 கி கால்சியம் மட்டுமே இருக்கிறது அதனால் வெறும் பால் குடித்து மட்டுமே கால்சியத்தின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது.
அகத்திக்கீரை கால்சியத்தின் அருமையான ஆதாரம் ஆகும். 100 கிராம் கீரையில் ௧௧௩௦ மிகி கால்சியம் உள்ளது.
முருங்கை கீரை 100 கிராமில் ௪௫௦ மிகி கால்சியம் இருக்கிறது.
பொன்னாங்கண்ணி கீரை 100 கிராமில் ௫௧௦ மிகி கால்சியம் இருக்கிறது.
அரை கீரை அல்லது சிறு கீரை 100 கிராமில் ௭௫௦ மிகி கால்சியம் இருக்கிறது.
சாதாரண கருவேப்பிலை 100 கிராமில் 830 மிகி ஸாகிளையம் இருக்கிறது.
நாம் அன்றாட பயன்படுத்தும் கொத்தமல்லி 100 கிராமில் கூட 150 மிகி கால்சியம் இருக்கிறது.
100 கிராம் ராகியை 340 மிகி கால்சியம் இருக்கிறது.
100 கிராம் குதிரைவாலியில் 280 மிகி கால்சியம் இருக்கிறது.
source https://tamil.indianexpress.com/photos/best-foods-for-strong-bones-doctor-arunkumar-7589422