மதுரை அரிட்டாபட்டி என்ற ஊரில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் சார்பில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க உள்ளதாக செய்தி வெளியாகிய நிலையில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு மாவட்ட ஆட்சியரிடமும் முறையிட்டனர்.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி, மேலூர், சுருளிப்பட்டி, கிடாரிப்பட்டி, நாயக்கர் பட்டி, தெற்கு தெரு, வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட 11 கிராமங்களளை உள்ளடக்கிய சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் என்ற நிறுவனம் டெண்டர் எடுக்க உள்ளதாக கூறியது. இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்காது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஆய்வுக்குகூட அனுமதி தர மாட்டோம். மக்கள் விரும்பாத திட்டம் எதையும் தமிழ்நாடு அரசு கொண்டு வராது எனவும் அமைச்சர் மூர்த்தி உறுதி அளித்தார்.
மேலும், டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக அரிட்டாபட்டி ஊராட்சியில் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் இன்று (நவ.23) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-govt-will-not-allow-tungsten-mining-in-madurai-says-min-moorthy-7603140