அமெரிக்காவில் நடந்துவரும் 6-வது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து கலந்துகொண்ட காசிமா 3 பிரிவுகளில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். காசிமாவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் 6வது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டி நடந்துவருகிறது. இந்த உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து, சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த காசிமா கலந்துகொண்டு விளையாடினார்.
உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 பிரிவுகளில் விளையாடிய காசிமா அந்த 3 பிரிவுகளிலும் தங்கம் வென்று அசத்தியுள்ளார். தங்கம் வென்ற காசிமாவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 பிரிவுகளில் தங்கம் வென்ற காசிமாவுக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “அமெரிக்காவில் நடைபெற்ற ஆறாவது கேரம் உலகக் கோப்பையில் சென்னையைச் சேர்ந்த நம் தமிழ்மகள் காசிமா மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளதற்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்!
பெருமை கொள்கிறேன் மகளே... எளியோரின் வெற்றியில்தான் திராவிட மாடலின் வெற்றி அடங்கியிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
காசிமாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, “சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தங்கை காசிமா, அமெரிக்காவில் நடைபெற்ற 6-ஆவது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 பிரிவுகளில் தங்கம் வென்று உலக அளவில் சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் காசிமாவின் பயணம் - பயிற்சிக்காக ரூ.1.50 லட்சத்தை நாம் வழங்கி வாழ்த்தியிருந்த நிலையில், 3 தங்கப் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டுக்கு பெருமைத் தேடித்தந்துள்ளார். தங்கை காசிமாவின் வெற்றிப்பயணம் தொடரட்டும்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/carrom-world-cup-chennai-girl-kasima-won-3-gold-mk-stalin-and-udhayanidhi-wishes-7588558