வியாழன், 28 நவம்பர், 2024

அல்லாஹ் ஆணா? பெண்ணா? - TNTJ,மாநிலத் தலைவர் ஆர்.அப்துல் கரீம் அவர்கள் பதில்

அல்லாஹ் ஆணா? பெண்ணா? - TNTJ,மாநிலத் தலைவர் ஆர்.அப்துல் கரீம் அவர்கள் பதில் 📌 இடம்: பம்மல், செங்கை மேற்கு மாவட்டம் 📌 நிகழ்ச்சி: இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் 📌 பேச்சாளர்: ஆர். அப்துல் கரீம் (மாநிலத் தலைவர், TNTJ) இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் மத நல்லிணக்க நிகழ்ச்சி என்பது இஸ்லாத்தை பற்றி பிறமத நண்பர்கள் அறிந்து கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு அருமையான நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் TNTJ மாநிலத் தலைவர் ஆர். அப்துல் கரீம் அவர்கள் முஸ்லிம் அல்லாத நண்பர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தெளிவான பதில்களை வழங்கியுள்ளார். இந்நிகழ்ச்சியின் முக்கிய கேள்வியாக "அல்லாஹ் ஆணா? பெண்ணா?" என்று ஒரு சகோதரர் கேட்ட போது, அகில உலகையும் படைத்த இறைவன் பாலினங்களுக்கு அப்பார்ப்பட்டவன். பாலினங்களையும் அனைத்து வகையான உயிரினங்களையும் படைத்த அல்லாஹ்வை ஆண் என்றோ பெண் என்றோ பாலினங்களோடு ஒப்பிட முடியாது. நமது மொழியில், ஒரே இறைவன் என்பதை குறிப்பிட ‘ஒருவன்’ என்று குறிப்பிடுகிறோம் என இன்னும பல நுணுக்கமான விளக்கத்தை வழங்கினார். இறைவனின் தன்மையைச் சுற்றி எழும் சந்தேகங்களுக்கு இஸ்லாத்தின் அருமை மற்றும் தெளிவான விளக்கங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. இந்த விவாதத்தை முழுமையாகப் பாருங்கள், அழகான அறிவுரைகளையும் தெளிவையும் பகிருங்கள்!