செவ்வாய், 26 நவம்பர், 2024

சென்னைக்கு 940 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

25 /11/2024

தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 18 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில் சென்னைக்கு தென்கிழக்கில் 940 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.

கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று (நவ.24) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இது, மேற்கு – வடமேற்கு திசையில் நகா்ந்து, இன்று (நவ. 25) காலை தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. நவ. 26, 27 ஆகிய தேதிகளில் இந்தத் தாழ்வு மண்டலம் நகரும் பாதையில் சற்று மாற்றம் ஏற்பட்டு வடமேற்கு திசையில் தமிழ்நாடு மற்றும் இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், தமிழ்நாட்டில் ஒருசில பகுதிகளில் இன்று (நவ.25) முதல் நாளை மறுநாள் (நவ.27) வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மணிக்கு 30 கிமீ வேகத்தில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கில் 940 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.

https://news7tamil.live/cycloneupdate-low-pressure-area-940-km-from-chennai.html

source https://news7tamil.live/cycloneupdate-low-pressure-area-940-km-from-chennai.html