சனி, 30 நவம்பர், 2024

புயல் கரையை கடக்கும் நேரம் எது? மாமல்லபுரம் பகுதியில் மின்சாரம் நிறுத்தம்

 

Cyclone Fengal: புயல் கரையை கடக்கும் நேரம் எது? மாமல்லபுரம் பகுதியில் மின்சாரம் நிறுத்தம்

cyc fengal

நேற்று இரவில் இருந்த வேகத்தை விட காலையில் புயலின் வேகம் குறைந்து இருக்கிறது எனவும் எனவே புயல் கரையை கடக்க தாமதமாகும் என வானிலை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தென்மேற்கு வங்க கடலில் உருவாகி உள்ள "ஃபீஞ்சல்"  புயல் இன்று (நவ.30) காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுவை அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

நேற்றையை விட இன்று மணிக்கு 7 கி.மீ வேகத்தில் மெதுவாக புயல் நகர்ந்து வருவதால் பிற்பகலில் அல்லாமல் இரவு 7 மணி அளவில் புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. 

மாமல்லபுரம் இடையே புயல் கரையை கடப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 
மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அங்கு பலத்த காற்று வீசி வருகிறது. இ.சி.ஆர், ஓ.எம்.ஆர் சாலைகளில் பொது மக்கள் பாதுகாப்பு கருதி பொதுபோக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 

30 11 24 



source https://tamil.indianexpress.com/tamilnadu/cyclone-fengal-heavy-rain-wind-power-shudown-in-mamallapuram-area-7659927