ஜார்க்கண்ட் மாநில பா.ஜ.க தனது சமூக ஊடக கணக்குகளில் "ஆதாரமற்ற" குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் வீடியோவை வெளியிட்டதாக காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியிருந்தது.
ஜார்கண்ட் மாநில பா.ஜ.க வெளியிட்ட "தவறான மற்றும் தவறாக வழிநடத்தும்" வீடியோக்கள் குறித்து காங்கிரஸ் அளித்த புகாரின் பேரில், ராஞ்சி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, பதிவுகளை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட சமூக ஊடக தளங்களுக்கு கடிதம் எழுதியதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.
பா.ஜ.க-வின் ஜார்கண்ட் பிரிவு தனது சமூக ஊடக கணக்குகளில் “ஆதாரமற்ற” குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் வீடியோவை வெளியிட்டதாக காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியிருந்தது. வரவிருக்கும் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் வாக்காளர்களை தகாத முறையில் செல்வாக்கு செலுத்த இந்த பதிவுகள் முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
ராஞ்சியில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையம், மாதிரி நடத்தை விதிகள் மற்றும் நடைமுறையில் உள்ள சட்ட விதிகளை மீறியதற்காக ஞாயிற்றுக்கிழமை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69 (ஏ)-ன் கீழ் பதிவுகளை அகற்றுமாறு சமூக ஊடக தளத்திற்கும் காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/jharkhand-bjp-posting-false-and-misleading-videos-on-social-media-fir-registered-against-jharkhand-bjp-7572170