தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்ய பிரதா சாகு, கால்நடைதுறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக பட்நாயக் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம், அர்ச்சனா பட்நாயக் தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அர்ச்சனா பட்நாயக் 2002-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். இவர் தற்போது சிறுகுறு தொழில் நிறுவனங்கள் துறையின் செயலாளராக உள்ளார். இதற்கும் முன்பு, ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைத் தேர்தல் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ள அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ் 2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலை நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/archana-patnaik-ias-appointed-as-tamil-nadu-first-chief-electoral-officer-7566315