ஞாயிறு, 13 டிசம்பர், 2015

ஆக்கிரமிப்பு செய்தால் என்ன செய்ய வேண்டும் ???

உங்கள் ஊர் அல்லது வட்டம் அல்லது மாவட்டம் எங்கயாவது பொது வழி பாதை /பொது தளத்தை ஆக்கிரமிப்பு செய்தால் என்ன செய்ய வேண்டும் ???
முதலில் அதை பற்றிய ஆவணங்கள் நம் கையில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்,
ஆவணங்கள் என்றால் என்னென்ன?
அந்த இடத்தின் வரைப்படம் ,ஆங்கிலத்தில் FMB ( Field Measurement Book )
சிலர் இதனை கெட்ச் (Sketch ) என்று சொல்வார்கள்,
ஆனால் வருவாய் துறை இதனை FMB என்றே அழைக்கப்படும்.
எதற்காக வரைப்படம் தேவை என்றால்,அந்த ஆக்கிரமிப்பு செய்த இடம் எவ்வாறு இருக்கிறது என்ற விபரங்கள் அந்த வரைப்படத்தில் இருக்கும்,
அந்த பொது வழியில் உள்ள சிறு வளைவு உட்பட மிக தெளிவாக ,எந்த அளவில் உள்ளது போன்ற விபரங்கள் அந்த வரைப்படத்தில் இருக்கும்.
யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?
முதலில் இதை பற்றி உங்கள் ஊர் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் கொடுக்க வேண்டும்,உங்கள் ஏரியா காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும்.
அப்புறம் தாசில்தார் ,
நடவடிக்கைகள் இல்லையெனில்,
சார் ஆட்சியர் ,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,
மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் கொடுக்க வேண்டும்.
இவ்வளவு நபர்களுக்கு புகார் கொடுக்க வேண்டுமா என்று நீங்கள் சிரமப்பட்டால்,
சுலபமாக,
உங்கள் ஏரியா காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்து விட்டு அதன் நகலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் க்கு அனுப்பி வையுங்கள்.
நில அபகரிப்பு தடுப்பு பிரிவு என்பது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் தான் இயங்குகிறது,
ஆதலால் நிச்சியமாக நடவடிக்கை இருக்கும்.
நேரில் எல்லாம் போய் புகார் கொடுக்க முடியாது என்று நீங்கள் யோசித்தால் ,அதற்கும் வழிகள் உண்டு,
உங்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டு,
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் WhatsApp நம்பருக்கு புகைப்படத்துன் புகார் அனுப்பலாம்,
ஆன் லைன் ல உங்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகார் கொடுக்கலாம்,
ஆன் லைன் ல Cm Special cell ல புகார் கொடுக்கலாம்.
அனைத்திற்கும் நடவடிக்கை நிச்சியமாக இருக்கும்.
குறிப்பு : புகார் கொடுக்கும் போது FMB இல் அந்த பாதையை நன்றாக ஒரு கலர் மையில் குறிப்பிட்டு அனுப்புங்கள்.
[[ பொது பாதைக்கு மட்டும் இல்லை,ஏரி,குளம்,ஆறு போன்ற அக்கிரமிப்புக்கும் இவைகள் பொருந்தும் ]]