ஞாயிறு, 13 டிசம்பர், 2015

இளையதலைமுறைகளுக்கு ,.


இக்காலகட்டத்தில் உள்ள இளைய தலைமுறையினர்களுக்கு நிச்சியமாக சட்ட கல்வி அவசியம்,
அடிப்படை சட்ட கல்வி கட்டாயம் தேவை.
உங்களில் ஒரு சிலர் ஏன் சட்ட கல்வி என்று நினைப்பீர்கள்,அட 500 ரூபாய் கொடுத்தால் போலிஸ் டேஷன் ல விட்டுடுவாங்க நு நினைக்கிறது தவறு.,
நீதித்துறையில் இன்னும் நியாயமாக இருப்பவர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.,
ஒரு நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால்,
பாராளுமன்றம்,
நிர்வாக துறை,
நீதித்துறை,
இவைகள் தான் முக்கிய பொறுப்புகள் வகிக்கிறது.
வக்கீல் இல்லாமல் கிரிமினல்,சிவில் ,கன்சுமர், என அனைத்து வழக்குகளையும் நீங்களே தொடரலாம்,அதற்கு தேவை அடிப்படை சட்டங்களும்,நீதிமன்ற விதிமுறைகளும் தான்.,
மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து,உச்சநீதிமன்றம் வரை உங்களால் வழக்கு நடத்த முடியும்.
சட்டம் என்பது உங்கள் வாழ்க்கையில் உங்களுடன் ஒன்றி பயனம் செய்யும் நிழல் போன்றது,
ஏதாவது பிரச்சினை என்றால் வழக்கறிஞர் க்கு போன் செய்வதா இல்லை என்ன செய்வது என்று பதற்றப்படுவோம்,.
ஆனால் அதுவே உங்களுக்கு அடிப்படை சட்டங்களும்,சட்டத்தில் சில விளக்கங்கள் தெரிந்தாலே போதும்,உங்களுக்கு எவ்வித பதற்றமும் ஏற்படாது, சுலபமாக அந்த பிரச்சனையை கையாளுவீர்கள்.
சட்டம் படியுங்கள்,
சட்டத்தை புரிந்துகொள்ளுங்கள்,
சட்டத்தை பயன்படுத்துங்கள்.
நாளை இந்தியா ,இன்றைய இளையதலைமுறை கையில்.