சென்னையில் ஒரு வாரத்துக்கு இலவச பி.எஸ்.என்.எல்.சேவை-
- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.
- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.
சென்னை: வெள்ளத்தில் மிதக்கும் சென்னையில் ஒரு வார காலத்துக்கு இலவச பி.எஸ்.என்.எல்.சேவை வழங்கப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார். தமிழகத்தின் தலைநகரம் சென்னை பெருவெள்ளத்தால் மூழ்கிக் கொண்டிருப்பதை மெல்ல மெல்ல இப்போதுதான் ஒட்டுமொத்த தேசமும் உணரத் தொடங்கியது. தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல், வெள்ளம் பாதித்த சென்னை வாசிகளுக்கு சலுகைகளை அறிவித்தது. தற்போது பி.எஸ்.என்.எல். தொலைபேசி அழைப்புகள் ஒரு வாரத்துக்கு சென்னையில் இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.