ஆளூர் ஷாநவாஸ்//
பேரிடர்_மீட்புச்_செய்திகளை பரப்புவதில்_பேதம்_பார்ப்பது, பேரிடரை_விட_கொடுமையானது.
சுமார் 30000 தொண்டூழியர்கள். முழுக்க முழுக்க இளைஞர்கள். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள். டிசம்பர் 6-இல் திரண்டிருக்கிறார்கள். எதற்கு?
பிறமத வழிபாட்டுத் தலத்தை இடிக்கும் 'கரசேவை'க்காகவா? பிறமக்கள் பன்றிக்கறி சாப்பிட்டிருக்கிறார்களா என சோதித்து, தெருவில் இழுத்துப்போட்டு அடித்துக் கொல்வதற்காகவா? பிறசமூகத்தின் அப்பாவிப் பிஞ்சுகளை உயிரோடு கொளுத்துவதற்காகவா? இல்லை!
வேறு எதற்கு?
சென்னை மற்றும் கடலூரில் பேரிடர் மீட்பில் களமாடுவதற்காகவே திரண்டிருக்கிறார்கள். த.த.ஜ மட்டுமல்ல, தமுமுக, முஸ்லிம் லீக், எஸ்.டி.பி.ஐ என அத்தனை முஸ்லிம் அமைப்புகளும், மஹல்லா ஜமாஅத்துகளும் களத்தில் நிற்கின்றன.
முஸ்லிம்கள் குறித்த எதிர்மறையான செய்திகளை ஊதிப்பெரிதாக்கும் ஊடகங்கள், அவர்களின் இந்த ஆக்கப்பூர்வ பணிகளை, உரிய முறையில் வெளியிட வேண்டும்.
பேரிடர் மீட்புச் செய்திகளை பரப்புவதில் பேதம் பார்ப்பது, பேரிடரை விட கொடுமையானது.
