
என்னடா இவங்கள இன்னும் காணமேன்னு பார்த்தேன் . நேத்தே வந்துடாங்கலாம் . எங்கு பேரழிவு நிகழ்ந்தாலும் ஓடோடி சென்று உதவி செய்யும் சீக்கிய மத அமைப்பினர் தான் #Khalsa_Aid சுனாமி மற்றும் தானே புயல் தாக்கின நேரத்திலயும் தமிழகம் வந்து மாதக்கணக்கில் தங்கி மக்களுக்கு சோறாக்கி போட்டாங்க . நேபாள பூகம்பத்தினால் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு உதவியவர்கள் தற்போது சிரியா அகதி முகாம்களில் சேவையாற்றுகின்றனர் . மத நம்பிக்கையின் மூலம் மற்றவர்களுக்கு நன்மை செய்யும் மதவாதிகளில் இவர்களும் ஒருவர் .