வெள்ளி, 11 டிசம்பர், 2015

பிலால் நகரில் தேங்கி நின்ற வெள்ளத்தை அப்புறப்படுத்தும் பணியில் எஸ்டிபிஐ கட்சியினர் !



அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கன மழை பெய்தது. இதில் அதிரையின் தாழ்வான பகுதிகளில் ஒன்றாகிய பிலால் நகர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் வெள்ளம் சூழ்ந்துள்ள பிலால் நகர் பகுதியின் வடிகால் வாய்க்கால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரிசெய்து தண்ணீரை வாய்க்கால்களில் சீராகக் கொண்டு செல்லும் பணிகளில் அதிரை எஸ்டிபிஐ கட்சியினர் ஈடுபட்டனர்.
எஸ்டிபிஐ கட்சியின் அதிரை நகர தலைவர் அஜார் தலைமையில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அன்வர், செயலாளர் இக்பால் உள்ளிட்ட எஸ்டிபிஐ கட்சியினர் பிலால் நகர் பகுதியில் முகாமிட்டு ஆங்காங்கே தேங்கி கிடந்த வெள்ள நீரை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த பணிக்காக மம்மட்டி, வாங்கருவா, கம்பு, கடப்பாரை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வாய்க்கால்களில் அடைபட்டுள்ள குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தினார்கள். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இவர்களின் பணியை இந்த பகுதியினர் வெகுவாக பாராட்டி நன்றி தெரிவித்தனர். மேலும் இவர்களுக்கு தேநீர் வழங்கி ஊக்கப்படுத்தினர்.
இதையடுத்து இந்த பணியை ஏற்பாடு செய்துகொடுத்த எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிரமாக களப்பணியாற்றி வரும் தனது கட்சியினரை சந்தித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
செய்தி வெளியிட்ட அதிரை நியூஸ்க்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
தகவல்:-
எஸ்டிபிஐ கட்சி.

Related Posts:

  • Hadis நபி(ஸல்) காலத்தில் நோன்புப் பெருநாளில் தொழுகைக்காகப் பாங்கு சொல்லப்பட்டதில்லை; தொழுகைக்குப் பிறகே உரையும் அமைந்திருந்தது.இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தா… Read More
  • உரிய தண்டனை வழங்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் *Y g மகேந்திரனை கைது செய்து! உரிய தண்டனை வழங்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ...* … Read More
  • மூலிகை மருத்துவம் 1) பொன்மேனி தரும் குப்பைமேனிகுப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும். 2) தேளை விரட்டும் கு… Read More
  • பல் வலி💥 👍👍👍👍👍இயற்கை மூலப்பொருட்கள்: பச்சை மிளகாய்-3,பனங்கல்கண்டு-50கிராம். உபயோகிக்கும் விதம்: பச்சை மிளகாயை நன்றாக அரைக்கவும்,பனங்கல்கண்டு 50கிராம்… Read More
  • காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்? சமூக நல்லிணக்கத்தை குலைத்து கலவரத்தைத் தூண்டிய நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்? வீரியமிகு போராட்டத்தில் இறங்க நேர… Read More