தமிழகத்தின் முதல் காரும் முதல் பேருந்தும் புதுகைக்கு சொந்தம் !!
புதுக்கோட்டை மன்னர்தான் தமிழகத்தில் முதன்முதலாக கார் வாங்கினார். Packard Car என அழைக்கப்பட்ட அந்தக் கார் 1901-இல் வாங்கப்பட்டது. அந்தக் கார் இயங்க ஆஸ்திரேலியாவிலிருந்து பெட்ரோல் வரவழைக்கவும் ஆங்கிலேய அரசு அனுமதி வழங்கியிருந்தது.
முதல் மகிழுந்து மட்டுமன்றி முதல் பேருந்தும் புதுக்கோட்டையில்தான் ஓடத் தொடங்கியது. தமிழ்நாட்டில் முதலில் ஓடிய பேருந்து பிரான்சு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
புதுக்கோட்டையிலிருந்து திருச்சிக்குச் செல்லும் பாதையில் இந்தப் பேருந்தின் உபயோகத்திற்காக ஆங்காங்கே பெரிய தொட்டிகளில் தண்ணீர் வைக்கப்பட்டிருக்கும். இந்தப் பேருந்தை வாங்கியவரும் புதுக்கோட்டை மன்னர்தான். வாங்கப்பட்ட ஆண்டு 1904.