ஞாயிறு, 13 டிசம்பர், 2015

முஸ்லிம்களுக்கு கூகுள் சுந்தர் பிச்சை ஆதரவு

முஸ்லிம்களை அமெரிக்காவில் அனுமதிக்க கூடாது என்ற ஜனாதிபதி வேட்பாளர் பேச்சுக்கு சுந்தர் பிச்சை பதிலடி
வாஷிங்டன்: முஸ்லிம்களை அமெரிக்காவிற்குள் அனுமதிக்க கூடாது என்று அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், நமது அடிப்படை வாழ்க்கை முறைக்கு அச்சம் ஏற்படுத்த வேண்டாம் என்று கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
இதுகுறித்து சோஷியல் மீடியாவான 'மீடியம்' மூலம் சுந்தர் பிச்சை கூறியுள்ளதாவது: நான் 22 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்தேன். அதிருஷ்டவசமாக இங்குள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க வாய்ப்பு கிடைத்தது.
எப்போதுமே திறமையாளர்களுக்கு அமெரிக்கா தனது கதவுகளை திறந்தே வைத்துள்ளது. நான் எனது பணி, குடும்பம் என அனைத்தையும் அமெரிக்காவிலேயே அமைத்துக்கொண்டேன். இந்தியாவில் இருப்பதை போலத்தான் அமெரிக்காவிலும் நான் உணர்கிறேன்.
அமெரிக்காவிற்கு மில்லியன் கணக்கில் வெளிநாடுகளில் இருந்து வந்து மக்கள் குடியேறுகிறார்கள். இது குடியேறிகளின் நாடு. எனவே, சகிப்புத்தன்மை குறித்த சர்ச்சை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது கவலையளிக்கிறது.
அமெரிக்கா, வாய்ப்புகளுக்கான ஒரு நாடு. அமெரிகர்களின், சகிப்புத்தன்மைதான் இந்த நாட்டின் மிகப்பெரிய பலம். இந்த அடிப்படை வாழ்க்கை முறையை அச்சுறுத்தாமல் இருப்போமாக. இவ்வாறு சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
ஏற்கனவே பேஸ்புக் நிறுவனர் மார்க்கும், முஸ்லிம்களுக்கு ஆதரவான கருத்தை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமியர்களின் ஊடகத்துறை's photo.